திருப்பூர் சத்துணவு பணியாளர் பாப்பம்மாள் வழக்கில் திடீர் திருப்பம்|ஆசிரியருக்கு இதுதான் வேலையா..?

0 521

பாப்பாம்பாள் கொடுத்த வன்கொடுமை புகார் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் சசிகலா வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

இது பற்றிய விபரம்…. தலைமையாசிரியர் சசிகலா உள்நோக்கத்தோடு இதுவரை பாப்பம்மாள் சமைத்த உணவை சாப்பிடாமல் இருந்த 40 குழந்தைகளில் ஒரேயொரு குழந்தையை மட்டும் நேற்று முன்தினம் உணவு சாப்பிட வைத்து இருக்கிறார் சாப்பிடும்போது மாணவி சிறுநீர் கழிக்க போகிறேன் என்று சொல்லி விட்டு சென்று இருக்கிறாள் அந்த இடைவெளியில் மாணவியின் உணவில் தானே பல்லியை போட்டு விட்டு அந்தப் பல்லியை தன் செல்போன் கேமரா வில் போட்டோ எடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சசிகலா பாப்பம்மாள் பல்லி விழுந்த உணவை சமைத்ததாக..

ஆனால் அது பொய் என்று கண்டுபிடித்து போலீஸ் கைது… ஏனென்றால் பாப்பம்மாள் இப்படியெல்லாம் பிரச்சனை செய்வார்கள் என்று முன்கூட்டியே யோசித்து பாதுகாப்பு கருதி எப்பவும் தான் சமைத்த கொஞ்சம் உணவை தனியே எடுத்து வைத்து அதை தான் சாப்பிட்டு பார்த்து சிறிது நேரம் ஆன பிறகே குழந்தைகளுக்கு கொடுத்து வந்திருக்கிறார்

அந்த உணவை காவல்துறை அதிகாரிகளை சோதித்து பார்க்க சொல்லி இருக்கிறார் அதில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிய வந்ததும்… வன்கொடுமை செய்யும் உள்நோக்கத்தோடு புகார் செய்ததாக தலைமையாசிரியை சசிகலா கைது செய்யப் பட்டு இருக்கிறார்…

மேலும் அந்த உணவை சாப்பிட்ட வேறு எந்த குழந்தைக்கும் ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை ..

ஒரு நாட்டில் யார் வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம் ஆனால் ஒரு ஆசிரியர் தவறானவராக இருக்க கூடாது… ஏனென்றால் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்கும் இடம் பள்ளிக்கூடம் கடவுளுக்கு பிறகு நாம் கையெடுத்து கும்பிடும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள் அதனால் அவர்கள் தவறே செய்யக்கூடாது …

ஆனால்

ஒரு பள்ளியின் தலையாசிரியரே இந்த லட்சணத்தில் இருந்தால் கூட இருக்கும் ஆசிரியர்கள் எப்படி இருப்பார்கள் அவர்கிடம் படிக்கும் மாணவர்களுக்கு எப்படி சமத்துவத்தைப் பற்றி பாடம் சொல்லி கொடுப்பார்கள்.. மறுபடியும் கற்காலம் நோக்கி போகிறோமா???

பதிவு : அகிலன் காங்கயம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.