திருச்சியில் தொடர்ந்து 31மான்கள் இறப்பிற்கு இதுதான் காரணம்..!

0 381

திருச்சி அருகில் இருக்கும் மில்லேனியம் பார்க்கில் கடந்த சில நாட்களாக 31 மான்கள் தொடர்ந்து இறந்துள்ளன.

இவை அனைத்தும் சூபா புல் எனப்படும் தாவர வகை உணவை அதிகளவில் சாப்பிட்டு ஜீரணிக்காமல் இறந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வகை தாவரத்தில் அதிகளவில் புரோட்டீன் சத்து இருப்பதால், ஜீரணிக்கவில்லை என்று பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இறந்த மான்களில் 25 மான்கள் பெண் மான்கள். கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி மட்டும் 17 மான்கள் இறந்துள்ளன.

இறந்த பெண் மான்களில் சில கர்ப்பம் தரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மிச்சம் இருக்கும் 180 மான்களுக்கு சூபா புல் போட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூபா புல் மட்டுமல்ல பனி காலங்களில் புல்களின் மேல் படிந்துள்ள பனிதுளிகளுடன் கால்நடைகள் அந்த புல்களை உட்கொண்டால் இறப்பதற்கு நேரிடும்..!

வெயில் காலத்தில் கால்நடைகளை விடிவதற்கு முன்பே மேய்ச்சலுக்கு அனுப்புவதும் பனிகாலத்தில் வெயில் வந்த பிறகு மேய்ச்சலுக்கு அனுப்புவதும் கிராமத்தில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது காரணம் இதுவே..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.