திடீர் சாலைவிபத்துல அந்த நண்பர் தவறிட்டார்..! உண்மை சம்பவம்

0 617

ரெண்டு நாளைக்கு முன்னாடி, என்னோட பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது… ஒருத்தர்க்கொருத்தர் கொஞ்சம் flashback ல மூழ்கிட்டு , இப்போ என்ன பண்ணிட்டு இருக்கோம்னு ஓடிட்டு இருந்துச்சு..

நான் என்னோட சுய பிரதாபங்களை எனக்கே விருப்பம் இல்லாம சொல்லிட்டு இருந்தேன்.. அப்போ அவன் சொன்ன ஒரு விஷயம் ரொம்ப வேதனையை மட்டுமில்லை சிந்திக்கவும் வெச்சது..

கோவையை சேர்ந்த அவனோட நண்பர் ஒருத்தர், ஏதோ private job ல இருந்திருக்கார்… wildlife photography ல மிக ஆர்வம் அவருக்கு… வர்ற சம்பளத்துல முக்காவாசி Equipment வாங்கவே செலவழிச்சிருக்கார்… சக Wildlife Photographer ஏதாவது வாங்கினால், உடனே இவரும் அதை வாங்கிடுவாராம்..

ஒரே ஒரு பெண் குழந்தை அவருக்கு, ( ஐந்து வயது ). ஒரு கட்டத்துல போட்டோ எடுக்கிறதை விட போட்டி போட்டுக்கிட்டு பொருள் வாங்குறதுல addict ஆயிட்டாராம்… அதாவது அவர்கிட்ட எல்லாம் இருக்கு ங்கற மாதிரி ……

என்னோட நண்பர்க்கு அவரோட குடும்ப சூழ்நிலை நல்லா தெரிஞ்சதால,, தேவைக்கேற்ப செலவு செய்யலாமே ன்னு சொல்லி இருக்கார்… அதுக்கு அவர் என்கூட வர்றவங்க எல்லாம் வெச்சிருக்காங்க , என்கிட்டே அது இல்லைன்னா அது மரியாதை இல்லைன்னு சொல்லி இருக்கார்…

அவர் கூட வருகிறவர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்கள்… பணம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.. அதை இவர் உணரவில்லை..அதன்பிறகு தான் அந்த சோகம்… திடீர் சாலைவிபத்துல அந்த நண்பர் தவறிட்டார்…

எதிர்பாராத இடியால நிலைகுலைஞ்சு போச்சு அவங்க குடும்பம்… second hand டாக விற்கப்பட்ட அவரோட சாதனங்களின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம்… அதில் பாதிக்கு மேல் கடனை அடைக்கவே சரியாகிவிட்டதாம்.. இப்பொழுது அந்த நண்பரின் மனைவி Department Store ல பில்லிங் section ல இருக்காங்களாம்..

இதெல்லாம் சொல்லிட்டு என் நண்பன்,, இந்த மாதிரி அடுத்தவன் வெச்சிருக்கான், நானும் வாங்கியே தீருவேன்கிற மனப்பான்மை இப்போ எல்லா விஷயத்துலயும் அதிகமாகிட்டே வருது.. மாச சம்பளத்துக்கு மேல EMI கட்டுவதை இன்னைக்கு ஒரு பெருமையாவே நினைக்கிறாங்க.. குடும்ப சந்தோசத்தை விட Society ல கிடைக்கிற அந்த அற்ப கௌரவுத்துக்காக தான் மெனக்கெடுறாங்க…

உற்பத்தியாளர்கள் தொடர்ந்து உசுப்பி உசுப்பி ஜனங்களை கடனாளியாக்குவதுல தெளிவா இருக்காங்க… உண்மையை தெரிஞ்சும் விட்டில் பூச்சி மாதிரி நாம போயி மாட்டிக்கிட்டே தான் இருக்கும்.. தேவைகேற்ப வாழ்க்கை ங்கறது போயி, இப்போ வாழ்க்கை முழுதும் ஏதோ தேவை, தேவை ன்னு போயிட்டிருக்கு..ம்ம்ம்ம்ம்ம்… என்னைக்கு அவங்கவங்க மரமண்டைக்கு உரைக்குதோ அன்னைக்குதான் இதுக்கெல்லாம் கொஞ்சம் தீர்வு கிடைக்கும்..

அவன் சொல்ல சொல்ல,,, என் மரமண்டைக்கு நல்லாவே உரைக்க ஆரம்பிச்சது.. அப்போ மத்தவங்களுக்கு ,,,,,,,, கவுண்டமணி வசனம் தான் நியாபகத்துக்கு வருது ,,, ” நாட்டுல இந்த மாதிரி 1௦௦ கோடி பேர் சுத்திட்டு இருக்காங்க,, அவங்களை எல்லாம் திருத்துறது என்னோட கடமை இல்ல,, முதல்ல என்னை நான் திருத்திக்கிறேன் ……. ”

பதிவு: Gowrishankar Krishnan

You might also like

Leave A Reply

Your email address will not be published.