தர்பூசணி ஜூஸில் இந்த தூள் சேர்த்து கலந்து குடித்தால், சுவை அற்புதமாக இருப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்..!

0 235

தர்பூசணியில் உள்ள உட்பொருட்கள் கலோரிகளைக் கரைப்பதோடு, சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்தால், சுவை அற்புதமாக இருப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்

எடை குறையும் :-

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது உடல் எடை குறையும் என்பது. இதற்கு இதில் சேர்க்கப்படும் மிளகுத் தூள் தான் காரணம். எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடியுங்கள்.

கொலஸ்ட்ரால் கட்டுப்படும் :-

உங்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் இருந்தால், தர்பூசணி ஜூஸ் உடன் மிளகுத் தூள் சேர்த்து குடிக்க, கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

கோடை அரிப்புக்கள் தடுக்கப்படும் :-

கோடையில் அதிகமான வியர்வையின் காரணமாக அரிப்புக்கள் ஏற்படும். இதனைத் தடுக்க தர்பூசணி ஜூஸ் உதவும்.

புற்றுநோய் தடுக்கப்படும்:-

தர்பூசணியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழிக்கும். குறிப்பாக ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும்.

மாரடைப்பு :-

தர்பூசணியில் வளமான அளவில் ஃபோலேட் உள்ளது. இந்த ஃபோலேட் தான் உடலில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்கும் .

நீர்ச்சத்தை தக்கவைக்கும் :-

தர்பூசணி கோடையில் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே உங்களுக்கு கோடையில் தாகம் அதிகம் இருந்தால், ஒரு நாளைக்கு 2-3 டம்ளர் தர்பூசணி ஜூஸை மிளகுத் தூள் சேர்த்து குடித்து வாருங்கள்.

வயிற்று பிரச்சனைகள் நீங்க

கோடை பழமாக கருதப்படும் தர்பூசணி பழம் புத்துணர்ச்சியை மட்டும் தரக்கூடிய பழம் அல்ல. வெயில் காலத்தில், உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக இது கருதப்படுகிறது.

தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் சரி செய்து கொள்ள முடியும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமணி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

இதய நோய்கள் மற்றும் புற்று நோய் ஆண்டியாக்ஸிடண்ட் விகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது. இது தசை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு இன்றியமையாததாக இருக்கிறது.

குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி. சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.