தர்பூசணியைச் சாப்பிடாதீங்க… அதுல ஊசி மூலமா சிவப்பு நிற ரசாயனத்தை ஏத்தி விக்கிறாங்லா..?

0 377

தர்பூசணியைச் சாப்பிடாதீங்க… அதுல ஊசி மூலமா சிவப்பு நிற ரசாயனத்தை ஏத்தி விக்கிறாங்க. டஇது உடம்புக்கு ஆபத்தானது… ஜி-9, பெங்களூர் வாழைப்பழம்னு பல பெயர்கள்ல அழைக்கப்படுற வாழைப் பழங்களைச் சாப்பிடாதீங்க. அது மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம். உங்க பரம்பரைக்கே ஆபத்து’இப்படியெல்லாம் அதிர வைக்கும் தகவல்கள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்கள் வாயிலாக படங்கள், வீடியோக்களாகப் பரவி, பரபரப்பையும் பயத்தையும் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த சீஸனில் தர்பூசணி என்ற வார்த்தையை உச்சரிக்கவே தயங்குகிறார்கள் பலரும்! இதே நிலைதான் பெங்களூர் வாழைக்கும்!

இதன் காரணமாக இவற்றின் விற்பனை மெள்ள குறைய ஆரம்பித்திருப்பது விவசாயிகளையும், வியாபாரி களையும் வெகுவாக பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில், இந்தத் தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது

“முன்பெல்லாம் வெளிநாடு போய் வருபவர்கள், பளபளப்பான வாழைப்பழத்தைக் கொண்டு வருவதைப் பார்த்திருப்போம். அந்த வாழைப்பழத்தைத்தான் இப்போது இங்கேயே விளைவித்துக் கொண்டிருக்கிறோம். புதிய தொழில்நுட்பத்தில், தரமான வாழைப்பழ ரகம்தான் இந்த ஜி-9. முன்பு பச்சை வாழை, ரொபாஸ்டா ரகங்கள் வர்த்தக ரீதியாக இருந்தன. இப்போ ஜி-9 இருக்கிறது. வாழைப்பழ சாகுபடியில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூச்சி, நோய் தாக்குதலுக்கு உள்ளாகாத ரகங்களைத் தேர்ந்தெடுத்து, திசு வளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்கிறார்கள். முறையான பராமரிப்பில், வாழைத்தாரை பிளாஸ்டிக் கவர்கள் மூலம் சுற்றி பாதுகாத்து பிறகு அறுவடை செய்யப்படுகிறது.

அறுவடை செய்த தார்கள், அருகிலுள்ள குளிர்பதன நிலையங்களில் சேமிக்கப்பட்டு எத்திலீன் வாயு மூலம் பழுக்க வைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தமுறையில் வரும் பழங்கள் எந்தவித புள்ளிகளோ, கீறல்களோ, அழுகலோ இல்லாமல், பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். அறுவடைக்குப் பிறகு உரிய பராமரிப்புடன், பேக்கிங் செய்து அனுப்பப்படுவதால், இந்தப் பழங்களை 5 நாட்கள் வரை வைத்து விற்பனை செய்யலாம். 5 நாட்களுக்குப் பிறகு, பழத்தில் உள்ள ஸ்டார்ச், சர்க்கரையாக மாறும்போது பழத்தின் மீது கரும்புள்ளிகள் தோன்றும். இப்படி சர்க்கரை அதிகமாக அதிகமாக பழத்தின் இனிப்புச் சுவை அதிகமாகும். அதனால்தான் நன்றாக பழுத்த பழம் இனிப்பாக இருக்கிறது. கடைகளில் விற்கும் ஜி-9 பழங்களை வாங்கி, இரண்டு நாள் வீட்டில் வைத்தால் கரும்புள்ளிகள் தோன்றி, பிறகு அழுகி விடும். இதுதான் உண்மை.

இந்த வாழைப்பழத்தை மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம் என்று சொல்வது தவறு. இதுவரை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழங்கள் பயிர் செய்யப்படவில்லை. அதற்கான பரிசோதனை முயற்சிகள்கூட நடைபெறவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.