தமிழ் நாடு முழுவதும் ஏன் கேன் தண்ணீர் நாளை முதல் தடை படுகிறது..?

0 1,172

தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோத நிலத்தடி நீர் உறிஞ்சுதலை தடை செய்தும், வர்த்தக பயன்படுத்துதலுக்காக நிலத்தடி நீர் உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், குடிநீருக்காக நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரி கிரேட்டர் தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முரளி செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்து உள்ளார். அவர் கூறும்பொழுது, நிலத்தடி நீரை எடுக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும். நிலத்தடி நீரை எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி இன்று மாலை முதல் நிறுத்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தினை தொடர்ந்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.

மதுக்கடைகளுக்கு அரசு காட்டும் கவனத்தில் சிறிது தண்ணீர் பக்கம் காட்டினால் தண்ணீர் திருட்டை தடுப்பதோடு தண்ணீர் விலையையும் குறைக்கலாம்..!

ஆனால் தமிழக அரசு..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.