தமிழ்நாட்டு கறவை மாட்டு இனங்கள்…?

0 480

காங்கேயம் இனம்

காங்கேயம் மாட்டு இனங்கள் தமிழ்நாட்டின் ஈரோடு, கோயம்பத்தூர் மாவட்டதிலுள்ள காங்கேயம், தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி, கோபிச் செட்டி பாளையம் பகுதிகளில் காணப்படுகின்றது. காங்கேயம் மாட்டு இனங்கள் பிறக்கும் போது சிவப்பு நிறமாக பிறந்து பின் ஆறு மாத பூர்த்தியில் சாம்பல் நிறமாக ஆகி விடும். காங்கேயம் மாட்டு இன காளை மாடுகள் சாம்பல் நிறத்தில் முதுகும், முன் பின் கால்களையும் கொண்டவையாகும். வண்டியிழுக்கும் திடகாத்திரமான காளைகளும் சாம்பல் நிறத்துடன் காணப்படும். காங்கேயம் பசு மாடுகள் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். காங்கேயம் இனத்தில் சில மாடுகள் சிவப்பு, கருப்பு, பழுப்பு மற்றும் பல நிறங்கள் கூடிய வெளித் தோலைக் கொண்டிருக்கும். காங்கேய இன மாட்டின் கண்கள் அடர்த்தியான நிறத்துடன், அவற்றை சுற்றி கருவளையங்கள் காணப்படும். ஒரு நேரத்தில் இவ்வின மாடுகள் இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை பால் தரும் திறனைப் பெற்றுள்ளன.

பர்கூர் இனம்:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலையை சுற்றிய பகுதிகளில் பர்கூர் இனம் காணப்படுகிறது. பர்கூர் மாட்டினஙத்தின் தோல் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற திட்டுகளுடன் காணப்படும். வெள்ளை, அடர்த்தியான பழுப்பு நிறத்தில் பர்கூர் இனம் காணப்படும். நன்கு அமைந்த உடற் கட்டுடனும், நடுத்தர அளவிலும் பர்கூர் இனம் காணப்படும். ஒரு நேரத்திற்கு ஒன்று முதல் மூன்று லிட்டர் வரை பால் தரும் திறனைப் பெற்றுள்ளன.

உம்பளாச் சேரி இனம்:-

உம்பலாச் சேரி இனங்கள் ஜாதி மாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்ற இதர பெயர்களிலும் அறியப்படுகின்றன. உம்பலாச் சேரி மாட்டினங்கள் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. பிறக்கும் போது உம்பாலச்சேரி இனத்தினைச் சேர்ந்த கன்றுகள் பொதுவாக சிவப்பு அல்லது பழுப்பு நிறத்துடன் இருக்கும். அவற்றின் முகம், வால் மற்றும் கால்களில் வெள்ளை நிறத்திட்டுகள் காணப்படும்.

புலிக்குளம் இனம்:-

இம்மாட்டு இனங்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது.புலிக்குளம் அல்லது ஆலம்பாடி காளைகள் அடர்ந்த சாம்பல் நிறத்துடன், கருப்பு நிறமாக இருக்கும். புலிக்குள இனப் பசு மாடுகள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்துடன் இருக்கும். இவ்வின மாடுகள் வளைந்த கொம்புகளைக் கொண்டிருக்கும். இம்மாட்டு இனங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் இதர வேலைகளுக்கு பயன்படுகின்றன. ஒரு நேரத்திற்கு ஒன்றரை முதல் மூன்று லிட்டர் வரை பால் தரும் திறனைப் பெற்றுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.