தமிழக அரசே சற்று செவி சாய்..! உங்களுக்கு தெரிந்தால் முன்வாருங்கள்..!

0 232

கடல்நீர் தாக்கத்திலிருந்து மீள வழிமுறைகள் தேவை!

காஜ புயல் கரையோரப் பகுதிகளிலான காமேஷ்வரம் விழுந்தமாவடி வேட்டைக்காரனிருப்பு முதல் கோடியக்கரை கோடியக்காடு வரை ஆழிப்பேரலைகளால் ஒரு கிமீ அளவிற்கு கடல் நீரை ஊருக்குள் கொண்டு வந்து சேர்த்து விட்டது.

பல இடங்களில் கடல் நீர் தானே வடிகால் அமைப்பு போல உருவாக்கி மீண்டும் கடலில் சேர்ந்து விட்டது ஆனால் ஒரு சில ஊர்களில் பல்லமான பகுதிகளிலும் விவசாய பூமியிலும் குலங்களிலும் தேங்கி இருக்கிறது இன்னும்.

இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அங்குள்ள கைபம்புகளில் குடிக்கவோ சமைக்கவோ பயன்படுத்த தகுதியற்ற உப்பு அதிகமான நீரே கிடைக்கிறது.

இவர்களின் உடனடி தேவை எப்படியாவது இந்தக் குளங்களிலும் விவசாய நிலங்களிலும் உள்ள உப்பு நீரை வெளி ஏற்றுவதும் விவாசாய வயல்களை மீட்டெடுத்து மீண்டும் விவசாயம் செய்ய வழிமுறைகளுமே !
நிலத்தடி நீரின் உப்பை குறைக்கவும் வழிமுறைகள் தேவைப்படுகிறது.

இயற்கை சார்ந்த வழிமுறைகள் இருந்தால் பகிரவும் முடிந்த வரை இதில் அனுபவம் உள்ளவர்கள் முன்வந்து வழிமுறைகளை முன் வைக்கவும்.

நம்மாழ்வார் ஐயா சுனாமியின் போது சரி செய்ததாக கேள்வி பட்டுள்ளோம்.
எப்படி எங்கு கடல்நீர் புகுந்த பகுதிகளை மீட்டெடுத்தார் என தெளிவாக தெரிந்தவர்கள் இருந்தாலும் அல்லது எந்த இடத்தில் என்று தெரிந்தாலும் தெரியப்படுத்தவும்.

அம்மக்கள் தற்போது செய்வது அறியாது வழிகாட்டல் இன்றி மிகவும் சோர்வடைந்துள்ளனர் :'( கேட்பதெல்லாம் வழிகாட்டுதல் மட்டுமே; தயவு செய்து நேரடி அனுபவம் உள்ளவர்கள் முன்வரவும் !

இப்பதிவு ஒரு குறிப்பிட்ட கடற்கரை கிராமத்திற்கானது.

தயவுசெய்து பகிருங்கள் மீட்க யாராவது முன் வர வாய்ப்பு உள்ளது

#காஜமீட்டெடிப்பு

You might also like

Leave A Reply

Your email address will not be published.