தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் வேகமாக பரவபோகும் பேக் நீயூஸ் இதுவாக கூட இருக்கலாம் யாரும் நம்பி ஏமாறாதீர்கள்…!

0 1,831

இது அபூர்வமான உயிரினம் ஒன்றுமில்லை, சாதாரண பொம்மை. பொம்மை என்று சொன்ன உடன் சிரிப்புதான் வரும் ! ஆம், உண்மையில் இது பொம்மைதான், அதும் சிலிகான் பொம்மை. சிலிகானை பயன்படுத்தி தத்துரூபமான தோற்றம் கொண்ட பொம்மைகள் செய்யும் நிறுவனங்கள் வெளிநாடுகளில் அதிகம் உள்ளன.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த Laira Maganuco என்ற கலை வடிவமைப்பாளர் உருவாக்கிய தத்துரூபமான 72 செ.மீ உயர ஹைப்ரிட் பெண் சுண்டெலிதான் இது. சிலிகானைப் பயன்படுத்தி ஒரே ஒரு வித்தியாசமான தோற்றம் கொண்ட சுண்டெலியை வடிவமைத்துள்ளார். தனது படைப்பாற்றலை விதவிதமாகக் காட்டில் இருப்பது போன்று புகைப்படங்களை எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் Laira.

மற்ற பொம்மைகள் போன்று வடிவமைக்காமல் வித்தியாசமான தோற்றத்தில் உறுப்புகள் தெரியும்படி அமைக்க வேண்டும் என வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டதால் இத்தகைய ஹைப்ரிட் பொம்மையை வடிவமைத்துள்ளார்.

சமூக வலைதள புரளி


கேரளாவின் நீலம்பூரில் அதிசய உயிரினம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அது 1000 வருடங்களுக்கு முற்பட்டதாம். மேலும், பூமியில் உள்ள எந்த ஒரு உயிரினத்தின் செல்லோடும் ஒத்துப்போகவில்லையாம். இதன் செல்லை எடுத்து சாகாவரம் பெற்ற மனிதர்களை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் பீதி அடைவார்கள் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியம் காக்கிறதாம். இதை விலைக்கு வாங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. உடனடியாக பகிரவும்

தமிழகத்தில் அதிய குழந்தை பிறந்துள்ளது என்று நாளுக்கு நாள் பேக் நீயூஸ் அதிகரித்துக்கொண்டே செல்கிறது எனினும் சமூக வலைதளங்களை நம்பிக்கை அல்லாத எந்த ஒரு செய்தியையும் பகிரவேண்டாம் பலரும் பொய் செய்திகளை உண்மை என்றும் நம்பி விடுகின்றனர்

 

மேலும் தகவல்களுக்கு

http://youturn.in

http://35.200.212.8

You might also like

Leave A Reply

Your email address will not be published.