டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்? தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்..!

0 1,668

சுங்கக் கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் கவனத்திற்கு..

நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் (NHAI) செல்லும் போது கொடுக்கும் பணம். டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல.

பிறகு வேறெதற்கு? என்கிறீர்களா?

சுங்கச் சாவடியைக் கடக்கும் போது, வாகனத்துக்கு ஏற்ப பணத்தைக் கட்டி ரசீது பெற்றுக் கொள்வோம். அதை பத்திரமாக வைத்து கொள்ளவும், எதற்கு என்றால்..

உங்க பயணம் எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்..

காரில் செல்பவர்கள் யாருக்காவது

1. மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரசீதின் பின்புறம் செல்போன் எண் பதிவாகியிருக்கும். அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்தில் வரும்.

2. வண்டி பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதுக்கு இன்னொரு நம்பர் இருக்கும். அதற்கு போன் செய்தால் பத்து நிமிடத்தில் உங்களுக்காக வந்துருவாங்க, வந்து பஞ்சர் போட்டு கொடுத்துடுவாங்க, ரிப்பேர் எனில் அதையும் சரி செய்து கொடுத்துடு வாங்க. இது அவங்க கடமையாகும்.

3. பெட்ரோல், டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால்.. தகவல் சொன்னா உங்களுக்கு அஞ்சு லிட்டர் அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்துவிடுவார்கள். அதுக்குண்டான பணத்தை கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நம்ம கிட்ட சுங்கக் கட்டணம் வசூல் பண்றாங்க.
இந்த விஷயம் நிறைய பேருக்குத் தெரியாமல் ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா தவிச்சு போறாங்க, மன உளைச்சலாகுறாங்க இதை தவிர்க்க இந்த செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்லவும்…!

ஒவ்வொரு டோல்கேட்டிலும் இந்த சர்விஸ் தொலைபேசி எண் மாறும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.