டிக் டாக் செயலி சீனர்களால் உருவாக்கப்பட்டது. சீனர்கள் தமிழர்கள் கெட்டுப்போகவேண்டும் என்று எண்ணி டிக் டாக் என்னும் செயலியை உருவாக்கவில்லை

0 445

டிக் டாக் செயலி சீனர்களால் உருவாக்கப்பட்டது. சீனர்கள் தமிழர்கள் கெட்டுப்போகவேண்டும் என்று எண்ணி டிக் டாக் என்னும் செயலியை உருவாக்கவில்லை. என்னைப் பொருத்தமட்டில் டிக் டாக் செயலியின் உருவாக்கம் நல்லதே.

காரணம், “மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளியில் கொண்டுவருவதற்கும் மற்றும் பொழுதுபோக்கிற்கும் உருவாக்கப்பட்டதே இந்த டிக் டாக் செயலி” இதை நாம் ஒழுங்கான முறையில் பயன்படுத்தினால் சிறப்பு.

கத்தி என்பது ஒரு தீமை விளைவிக்கக் கூடிய பொருள் ஆனால், நாம் கத்தியை தேவைக்கு பயன்படுத்துவதற்காக ஒவ்வொருவரின் வீட்டிலும் வைத்துள்ளோம். காரணம், கத்தி இல்லாமல் சமையல் செய்வது கடினம். கத்தியை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீமைக்கும் பயன்படுத்தலாம். கத்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமது மனநிலையைப் பொருத்தது. இதை போன்றே டிக் டாக் செயலியும்.

டிக் டாக் செயலியில் மட்டும் தவறுகள் நடைபெறுவது இல்லை. முகநூல், கீச்சகம், புலனம், வலையொளி, தேடலி, போன்ற செயலிகளும் தவறுகள் உள்ளன. இவற்றை தவறாக பயன்படுத்தி எத்தனை குடும்பங்கள் உடைந்துபோய் இருக்கிறது என்று தெரியுமா? ஒரு காதல் இணையை பிரிப்பதற்கு எண்ணினால் யாரும் பெரிய திட்டங்களைப் போட்டு செயல்படவேண்டுயதில்லை.

காதல் இணைகளின் அழைத்து அவர்களின் திறன்பேசியை வாங்கி பெண்ணின் திறன்பேசியை ஆணிடமும், ஆணின் திறன்பேசியை பெண்ணிடமும் கொடுத்து ஒருநாள் பயன்படுத்த சொன்னால் போதும். இரண்டும் பேரும் அடுத்த நாளே பிரிந்துவிடுவார்கள். காரணம், அழைபேசியில் அவ்வளவு கேடுகெட்ட செயல்கள் நடைபெறுகின்றன. [நான் எல்லோரையும் சொல்லவில்லை].

இவ்வாறு இருக்கும் இணைய உலகில் நீங்கள் ஒரு செயலியை மட்டும் குறிவைத்து தாக்குவது தவறு. வேண்டும் எனில் சில காட்டுபாடுகளை உருவாக்கி டிக் டாக் என்ற செயலியின் நிறுவனத்திடம் ஒப்படைத்து இதை செயற்படுத்துமாறு வலியுறுத்தலாம்.

டிக் டாக் செயலி மூலம் பல நன்மைகளும் நடந்துள்ளன. குறிப்பாக, நடிப்புத் திறமை உள்ள மனிதர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளன. இப்பொழுது ஒளிப்பரப்பாகும் பல சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் நடிகர்/ நடிகைகள் பெரும்பாலானோர் டிக் டாக் செயலியில் புகழ்பெற்றவர்கள். பலருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இவ்வாறாக டிக் டாக்கில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

இறுதியாக,

நானும் டிக் டாக் செயலியை பயன்படுத்தியுள்ளேன். ஆனால், நான் இப்பொழுது பயன்படுத்துவது இல்லை. காரணம், எனது பொழுதுபோக்கு வேறு ஒன்றாகிப் போனது.

படைக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் நல்லதற்காவே படைக்கப்படுகிறது. அது நல்லதாவதும், தீயவையாவதும் நம் கையில்தான் உள்ளது

டிக் டாக் செயலி என்பது சிறிய அளவிலான காணொளிகளை உருவாக்க மற்றும் பகிர பயன்படுத்தப்படுகிறது.உலகம் முழுவதுமாக 80கோடி முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் அதிகமாக பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது….தமிழகத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளுள் இதுவும் ஒன்று ஆகவே தான் தமிழ்நாடு அரசு இந்தசெயலியை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்தாக தகவல்…

டிக்டாக் செயலியை பயன்படுத்தும் பெண்கள் ஆபசமாக பேசுவதாகவும் நடனம் ஆடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே அரசு தடை பரிசீலனை செய்கிறது.. நல்லது …இதுபோல தொலைக்காட்சியில் வருகின்ற ஆபாச நிகழ்ச்சிகளை தடை செய்யுமா? அல்லது மக்கள் வேண்டாம் என்று போராடும் அரசு மதுபான கடைகளை முடுமா?டிக்டாக் செயலி தடை் செய்வது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது.எல்லா சமூக வலைத்தளங்களிலும் சில குறைகள் உள்ளன.
டிக் டாக் அதற்கு விதிவிலக்கல்ல..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.