டிக்கெட், பாஸ்போர்ட்,விசா இல்லாமல் பல நாடுகள் சுற்றும் இவைகள் பற்றி…!

0 302

மொழிப் பிரச்சனை இல்லை, டிக்கெட் ரிசர்வ் பண்ற டென்ஷன் இல்லை, பாஸ்போர்ட் வேண்டியது இல்லை, ஒர்க் பெர்மிட், டூரிஸ்ட் விசா எதுவும் வேண்டியது இல்லை, பெட்ரோல் விலை எவ்வளவு ஏத்தினாலும் கவலையே இல்லை…

ரெண்டு றெக்கையை நம்பி இரண்டாயிரம் மைலுக்கு அந்தப்பக்கம் இருந்து பக்கிப் பய புள்ளைங்க வருசா வருஷம் வலசை வாரானுங்க.

அப்படி அங்க இருந்து இங்க வந்து என்ன செய்யுறானுங்கன்னு பார்த்தா, விதைச்ச நெல்லு எல்லாம் வீடு வந்து சேரணும் சாமின்னு வேண்டிக்கிட்ட விவசாயிக்கு நன்மை செய்ய, வளர்ந்த பயிரை எல்லாம் வச்சி செய்யுற பூச்சியை புடிச்சி திண்ணு, ஊரைக் காக்குற சாமியாட்டம் வந்த எங்க தகைவிலான் குருவிக்கு, படையல் வச்சி, பொங்கல் வைக்கலைன்னாலும் பரவாயில்லை.

கருமம் இந்த பூச்சிக் கொல்லியை அடிச்சி, அடிச்சி காக்க வந்த காத்தவராயன் சாமியை காவு வாங்கிடாதீங்க எங்க மக்கா…. காவு வாங்கிடாதீங்க

– படத்தில் இருப்பது மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருடம் தோறும் வலசை வந்து செல்லும் தகைவிலான் குருவி – Barn swallow (Hirundo rustica)

புகைப்படம், பதிவு:ரவிந்தரன் நடராஜன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.