டாக்டர் என் குழந்தை கட்டிலில் இருந்து விழுந்துட்டான் தலைக்கு ஸ்கேன் எடுக்கணுமா..?

0 728

பொதுவாக குழந்தைகள் கீழே விழுந்தவுடன் சிறிது நேரம் அழுது விட்டு பிறகு தூங்கிவிடும். தலையில் அடிபட்ட இடத்தில் சிறிது வீக்கம் வரலாம். முதலுதவியாக தலையில் அடிபட்ட இடத்தில் ice வைக்கலாம் இது வீக்கம் ஏற்படுவதையும் வலியையும் குறைக்கும். அழுத்தி தேய்க்க கூடாது
இந்த குழந்தைகளுக்கு தலைக்கு ஸ்கேன் தேவை இல்லை

கீழே விழுந்தவுடன் குழந்தை மயக்கமடைந்து சுய நினைவு இல்லாமல் போனால்

கீழே விழுந்த பின் தொடர்ந்து வாந்தி எடுத்தால்

வலிப்பு வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் மருத்துவர் குழந்தையை பரிசோதித்து விட்டு தேவை எனில் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்வார்.

பெரும்பாலான பெற்றோர்களின் பயம் தலையில் அடிபட்டால் பிற்காலத்தில் ஏதேனும் தொந்தரவு வருமோ என்பதுதான். உடனடியாக எந்த அறிகுறியும் இல்லாமல் பிற்காலத்தில் தொந்தரவு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.

பெற்றோரின் அடுத்த கேள்வி

ஸ்கேன் எடுத்துட்டா நிம்மதியா பயம் இல்லாம இருக்கலாம் இல்லையா?

C T ஸ்கேன் என்பது கதிர்வீச்சு (X – Ray ) கொண்டு உடலின் உறுப்புகளை படம் பிடித்து காட்டுகிறது.இந்த X – Ray வை உடலில் செலுத்தி தான் ஸ்கேன் எடுக்க படுகிறது. இந்த கதிர்வீச்சினால் உடலில் பல தீமைகள் ஏற்படலாம்

அதிகபடியான கதிர் வீசினால் வாந்தி, தலைவலி மயக்கம் போன்றவை உடனடியாக ஏற்படலாம்

பிற்காலத்தில் இரத்த புற்றுநோய், மூளை புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்புகள் அதிகம்.
கதிர்வீச்சினால் மரபணுக்கள் சேதமடையலாம். இதனால் அடுத்த சந்ததியினர் பிறவி குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பு உள்ளது

எங்களது பயத்தை போக்க வழியே இல்லையா டாக்டர்?

MRI ஸ்கேன் என்பது கதிர்வீச்சு அபாயம் இல்லாதது. ஆனால் கட்டணம் சற்று அதிகம்.

பதிவு: DR.C.MAHESH Kumar

You might also like

Leave A Reply

Your email address will not be published.