ஜல்லிக்கட்டில் கலக்கும் வத்திராப்பு கிடை காளைகள்

0 1,244

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பெயர் பெற்ற வத்திராப்பு கிடை மற்றும் மலை மாடுகள் பற்றி ஒரு சிறப்பு பார்வை

ஜல்லிக்கட்டில் நல்ல துடிப்புடன் ரோசமாக வலம் வரும் காளைகள் என்றாலே அது புலிக்குளம் இனம் மாடுகளே, ஆனால் இந்த வருடத்தில் சிறந்த காளைகளாக வரக்கூடிய காளைகள் மட்டும் களத்தில் நின்று விளையாடிய காளைகள் பெறும்பாலும் வத்திராப்பு கிடை காளைகள் தான்.

வீடியோ : https://youtu.be/WTk4Nc23JOg

அலங்காநல்லூர் வாடியில் அதிகம் பேசப்பட்ட காளை செந்தில் தொண்டமான் காளை ஏன்னென்றால் பிடிக்க வந்த வீரனை குத்தி தள்ளி வீரனின் டவுசரை கலற்றிக் கொண்டு ஓடியது. பார்வையாளர்களை உற்சாகப்படுதியது. இந்த காளையின் பிறப்பிடம் வத்திராப்பு பகுதி. கிடைமாடுகளில் இன விருத்திக்காக வளர்த்த காளை தற்ப்போது ஜல்லிக்கட்டில் அனைவரையும் ஈர்த்த காளையவும் இந்த வருடத்தின் சிறந்த காளையவும் செந்தில் தொண்டமான் அவர்களின் பேட்ட காளி வத்திராப்பு காளை தான் கலந்து கொண்ட அனைத்து களத்திலும் தன் படபடப்பு ஆட்டத்தினால் அதிகம் பார்வையாளர்களை கவர்ந்த காளை.

2018 – சென்ற வருடம் பட்டைய கிளப்பி சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி காட்டிய கரூர் SP குமார் அவர்களின் காளையும் வத்திராப்பு பகுதியை சேர்ந்த காளை தான். இந்த காளை வாடியில் வந்தாலே வீரர்கள் களத்தை வீட்டு வாடிக்கு கட்டியுள்ள மரத்தின் மேல் ஏறி விடுவார்கள். ரோசக்காரன் யாரையும் ஈசியாக நெருங்க விடாது. கலந்து கொண்ட அனைத்து வாடியிலும் முத்திரை பதித்து சிறப்பு பரிசை தட்டி சென்ற காளை. SP குமார் அவர்களுக்கு பெயரும் புகழும் வாங்கி தந்த காளை கரூர் வெள்ளை என்று அழைக்கும் காளையும் வத்திராப்பு கிடை மாடு தான்.

மீண்டும் ஒரு காளை கோவை ஜல்லிக்கட்டில் கலக்கியது, காளைகளின் அழகனாகவும் தேர்வு செய்யப்பட்ட காளை. வத்திராப்பு சேதுநாராயணபுரத்தை சேர்ந்த காளை தான். கலந்து கொண்ட இரு ஜல்லிக்கட்டிலும் வெற்றி கண்ட காளை. களத்திலும் நின்று விளையாடி பார்வையாளர்களை பரவசப்படுத்திய காளை.

இதே சூழலில் வத்திராப்பு காளை என்றாலே தனி மரியாதை தான் ஜல்லிக்கட்டில், அனைத்து காளைகளும் களத்தில் நின்று விளையாடுகின்றது. காளை வளர்ப்பவர் வத்திராப்பு பக்கம் காளைகளை வாங்க செல்வதால் வத்திராப்பு கிடை காளைகளுக்கு மவுசு அதிகம். ஜல்லிக்கட்டில் எங்கும் அவிர்க்காத காளைகள் கூட 1 லட்சம் ரூபாய்க்கு வாங்க ஆள் தற்ப்போது உள்ளார்கள், பணம் கொடுத்தாலும் காளைகள் கிடை காளையாக வேண்டும் என்பதால் கிடைக்காரர்கள் சற்று யோசிக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.