சொமாட்டோ ஊழியர் பசிக்காக சாப்பிட்டார் சரி.. அந்த உணவை ஆர்டர் செய்தவன் குப்பையில் கொட்டவா..?

0 1,288

Zomato ஊழியர் ஒருவர் சாப்பாட்டுக்களை எச்சில் படுத்திவிட்டு மீண்டும் பார்சல் செய்து வைத்துவிட்டார் அதற்கு பொதுமக்களின் விமர்சனங்கள் இவை

வாங்கியவனும் பசிக்காக தானே வாங்கினான்? இவன் பசிக்காக அவன் பசியை திருடுவது என்ன நியாயம்?

இங்கே வெறும் டீ மட்டுமே மதிய உணவாக உண்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி செய்வதை ஒரு முறை மன்னிக்கலாம் .. ஆனால் நியாயப்படுத்தி பேசுவது தான் அசிங்கம். இது அடுத்தவர்களை தவறு செய்ய தூண்டும் அல்லது பலரின் நேர்மையான உழைப்புக்கள் சந்தேக பட வைக்கும். இவை இரண்டுமே ஆபத்தானவை..!

அதெல்லாம் ரைட்டு தான்.. அந்த வண்டி நின்ன இடத்துல வயித்து பசிக்கு யாராச்சு திருடிருந்தா பரவாயில்ல.. பைக் அதுக்கு போட பெட்ரோல், மாச சம்பளம், டிப்ஸ் எல்லாத்துக்கு உடன்பட்டுதான சோமேட்டோ ஊழியர். பசிச்சா.. தப்பில்ல எடுத்து சாப்டுட்டு..ஓனர் ஓனர் பசிச்சுடுச்சு எடுத்து சாப்பிட்டேன்.. புது ஆர்டர் வாங்கி டெலிவர் பண்ணிடலாம் ஓனர்னு சொல்ல தைரியம் இருக்குதா???.

இங்க இருந்து பாலைவனத்தில டெலிவர் பண்ண சொல்லல.. 5கிமீ சுற்றளவுல தான பண்றாங்க.. இது வாடிக்கையாளருக்கு துரோகம் செய்வது போல தான்.. ஆர்டர் பன்றவரும் அந்த பணத்த கஷ்டப்பட்டுதான சம்பாரிப்பாரு.. இந்த ஊழியர் டீகடையில டீ கேட்டு அதை கடைக்காரு குடிச்சு பார்த்து கொடுத்தா.. பாவம் பசி போலனு ஏத்துப்பாரா…?? இங்க வாழ்ற ஒரு ஒருத்தரும் எதாச்சு ஒரு சூழல்ல கஷ்டப்படுறவங்க தான்… எல்லாத்துக்கும் பாவம்,பரிதாபங்கள் சாயம் வேண்டாமே!

பசியா? உணவுக்கு கூட பணம் இல்லாத வறுமையா?.சரி!அப்படியே வைத்துக் கொள்வோம். சாப்பிட்டு விட்டு, பார்சல் தவறி விட்டது என்று ஏதாவது காரணம் சொல்லி இருக்கலாம். சாப்பிட்டு விட்டு திரும்பவும் அந்த எச்சில் உணவை மீண்டும் பேக் செய்து சப்ளை செய்வது எவ்வளவு வக்கிர சிந்தனை?
இந்த குரூர புத்தியை எப்படி சாதாரணமாக ஏதோ பசி என்று சமாளிக்க முயற்சிக்கிறீர்கள்?எல்லோரையும் முட்டாள்கள் ஆக்கும் முயற்சியா?

அந்த நபர் செய்த தவறை பெரிய அளவில் விளம்பரப்படுத்தாமல் மன்னிக்கலாம்…. ஆனால் அவர் செய்தது தவறு அல்ல என்று கூற இயலாது…

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவனும் அதை அவளிடம் கொண்டு சேர்க்கும் வேலை செய்பவனும் அவனவன் வயிற்றுப்பசிக்கு ஆகவே இங்கு உழைக்கிறான்..

இதில் தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும் விமர்சனங்கள் குறைக்கப்பட வேண்டுமே தவிர இதை நியாயப்படுத்த எதுவுமில்லை.

இவை அனைத்தும் பொதுமக்களின் கருத்து இதுவே உங்களின் கருத்து என்றால் பகிருங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.