சுலபமாக மழை நீர் சேமிப்பு தொட்டி அமைப்பது எப்படி?

0 688

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டடங்களில் உருவாக்கி பராமரிக்க வேண்டும்.

கட்டடிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மழை நீரை தரைப் பகுதிக்கு கொண்டு செல்ல மழை நீர் வடி குழாயினை அமைக்க வேண்டும். வடி குழாய்க்கு அல்லது கட்டடங்களின் அருகில் தரை பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்திற்கு கசிவு நீர் குழி ஒன்றை செங்கல் கொண்டு கட்ட வேண்டும்.

அதன் பின் குழியை கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லியைக் கொண்டு 1 மீட்டர் ஆழத்திற்கு நிரப்ப வேண்டும்.

மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை வடிகுழாய் மூலம் கசிவு நீர் குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். இதுபோன்று முறையாக கசிவு நீர்குழி அமைத்தால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை நேரடியாக பூமிக்குள் ஊறச் செய்யலாம். கசிவு நீர் குழியை சிமெண்ட் மூடி கொண்டு மூட வேண்டும்.

கட்டடம் அமைந்துள்ள பகுதி களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நீரூட்டல் கிணற்றை அனைத்து வகையான பகுதிகளில் அமைத்திடலாம். கட்டட வளாகத்தில் பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளி கிணற்றை நாம் மழை நீர் சேகரிக்க பயன்படுத்தலாம்.

கட்டடத்தில் இருக்கும் மழை நீர் வடி குழாய்களை இணைத்து கிணறு இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வடி கட்டும் தொட்டி அமைத்திட்டால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை வடி குழாய் மூலம் பயன்பாட்டு கிணற்றில் செலுத்தி மழை நீரை ஊறச்செய்யலாம்.

எனவே, இதுவரை மழை நீர் கட்டமைப்புகள் அமைக்கப்படாமல் இருந்தால் தாமதமின்றி உடனடியாக கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமித்து நீர் வளத்தை பெருக்கிட வேண்டும்.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.