சுஜாதா ஜெயராமன் அவர்களின் வரிகள்..! இதற்காகவா பெண்கள் பிறக்கிறோம்..?

0 349

கதறி அழுகின்றன, கெஞ்சுகின்றன
ஆசிபாக்களும் ஹாசினிகளும் கீதாக்களும்
கடுமையான சட்டங்களினால் என்னை
தாயின் கருவறையில் காப்பாற்றியது,
கோயிலி கருவறையிலும் மசுதியிலும் சர்சிலும் கழுவறுக்கத்தானா?
என்னை முழுமையான பெண்ணாய் வளர விடவில்லை,
நான் பூப்பெய்தி பருவ பெண்ணாய்
வாழும் வரை விடவில்லை.
பாவிகளே!

என் பால் பற்கள் கூட இன்னும் மாறவில்லை.
அதற்குள் என்னை பருந்துகளாய் குதறி விட்டேர்களே!
பெண்சிசு பாலின கண்டறியும் தடைக்கான சட்டத்தை
எனக்காகவாவது தளர்த்தியிருக்கலாம்.
தாயின் கருவறையிலேயே என்னை
கொன்று ஒழித்திருந்தால்

மரணத்திலும் என் கண்ணியம் காக்கப்பட்டிருக்குமே!
இனியாவது சிசு பாலின சோதனை தடைச்சட்டம்
கடுமையாக்கியது போல்
குழந்தைகளை பாலுணர்வுடன் தீண்டும் காமுகர்களை
கண்டதுண்டமாக வெட்டி போட
கடுமையாக சட்டம் கொண்டு வாருங்கள்.

தாயின் கருவறையில் எங்களை காப்பாற்றிவிட்டு ,
பலிபூசைக்கு நேர்ந்து விட்ட ஆடுகளை போல்
எங்களை ஐந்து வயதிலும் , பத்து வயதிலும்
காமந்திர கயவர்களுக்கு காவு கொடுக்க
நாங்கள் பிறக்கவே விரும்பவில்லை.
கருவறையிலேயே தொலைந்த குழந்தைகளாய்
இறக்கவே விரும்புகிறோம் !

கருவிலிருப்பது பெண்குழந்தை என்று தெரிந்தால்,
பெண்சிசு கொலை பயம் மட்டும் காரணமில்லை.
கருவிலிருப்பது பெண் குழந்தயானால்
கருவறைக்குள்ளேயே கற்பழிக்கும்
கயவர்கள் உலவும் தேசமிது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.