சிறந்த மனைவிக்கான 6 தகுதிகள் இதில் குறையிருந்தாலும் புரிந்து வாழ முயலுங்கள்..!

0 1,304

திருமணத்திற்கு முன் பெண்களுக்கு தனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்க வேண்டும், இது போல் நடந்து கொள்ள வேண்டும், என்றும் காதலுடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்பதை போன்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். அதே கணவர்களும் திரைப்படத்தில் வருவதை போல் மனைவி நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதுடன் சில குணாதியங்களை, தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளை கூட கணவருக்காக இழக்க அவர்களால் மட்டுமே முடியும். இங்கு சிறந்த மனைவிக்காக
6 தகுதிகளாக கூறப்படுபவற்றை பார்க்கலாம்.

♦1, அவருக்கான இடத்தை கொடுங்கள்

என்னதான் கணவன் மனைவிக்குள் ஒளிவு மறைவு இல்லாமல் இருந்தாலும், கணவனுக்கும் மனைவிக்கும் அவர்களுக்கென்ற தனிப்பட்ட சொந்த விஷயங்கள் இருக்கும். அது உங்கள் வாழ்க்கையிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்கும். அவர் நண்பர்களுடன் நேரம் செலவிட விரும்பலாம் அல்லது வேறு ஏதாவது ஒன்றாக கூட இருக்கலாம். அது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தலாம். அதற்காக கவலையடைய வேண்டியதில்லை, அவர் அந்த நாளின் இறுதியில் உங்களை தேடி வந்து விடுவார்.

♦2 , அமைப்பு திறன்

யாருக்கும் ஒரு குழப்பமாக சூழ்நிலையில் வாழ பிடிக்காது. உங்கள் கணவரும் அதில் அடங்குவார். நேர்மறையான எண்ணங்களுடன் உங்கள் உறவை எடுத்து செல்ல உங்கள் இடம் மற்றும் சுற்று புறத்தை சரிவர பராமரிக்கவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் வேண்டும். உங்கள் வீட்டை அலங்கரித்து உங்கள் கணவருக்கு ஆச்சர்யத்தை கொடுங்கள். அவை உங்கள் கணவரால் விரும்ப தக்கதாக இருக்கும். மிக பிரபலாமான வாசகம் ஒன்று, “மனைவி என்பவள் சிறந்த தோழியாகவும், காதலி இரண்டாம் அல்லது மூன்றாம் நபர் மற்றும் பணிப்பெண்ணே இவர்களுள் முக்கியமான ஒருவர்”, என்றும் சொல்லப்
படுவதுண்டு. உங்கள் கணவர் ஆச்சர்யத்தை கொடுத்தற்காக, உங்களை பாராட்டவும், ஊக்குவிக்கவும் செய்வார்.

♦3, உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்கள் என்றால், எப்போதும் அவர்களுக்கு தெரியப்படுத்தி கொண்டே இருங்கள். நீங்கள் அவரை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதையும், நீங்கள் அவருக்காக உணருகிற விதத்தையும் அறிந்துகொள்ள, உங்கள் கணவர் எப்போதும் விரும்புவார். ஒரு மனிதனின் இதயத்திற்கு முக்கியமானது அவரது வயிறு! நீங்கள் அங்கு சென்றால், நீங்கள் கிட்டத்தட்ட போரில் வென்றிருக்கின்றீர்கள் என்றே சொல்லலாம். நீங்கள் அவரை ஆச்சரிய படுத்தும் பரிசுகளை கொடுக்கவும் மற்றும் சிறப்பான சந்தர்ப்பங்களை ஒன்றாக சேர்ந்து கொண்டாடவும் செய்யுங்கள். உங்கள் கணவர் எப்போதும் உங்கள் அருகாமையிலேயே இருப்பார்.

♦4, நேர்மை மற்றும் உண்மை

உறவுகளுக்குள் அத்தியாவசியமான ஒன்று நம்பிக்கை. நீங்கள் எப்போதும் உங்கள் கணவருடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் கணவரின் மீது நம்பிக்கை வையுங்கள், முழுமையாக நம்புங்கள். உறவுகளுக்குள் இருக்கும் நம்பிக்கையே, அவர்களை சிறந்த உறவாக மாற்றுகிறது. அவர் செய்யும் செயல் உங்களை பாதித்தால், அதை கணவரிடம் தெரிவித்து மாற்ற முயற்சியுங்கள். இது உங்களை மகிழ்ச்சியடைய செய்வதோடு, உங்கள் உறவை பலப்படுத்தும்.

♦5, இணக்கம்

உங்கள் கருத்துகள் அவருடன் பொருந்தவில்லை என்பதால், நீங்கள் இணக்கமற்றவர் என்று அர்த்தம் இல்லை. சிறந்த மனைவியாக இருப்பதால், நீங்கள் எப்போதும் உங்கள் உறவுமுறையைப் பார்த்து நெருங்க நினைப்பதை விட, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி உங்களை நிரூபிக்க வேண்டும். இறுதியில், நீங்கள் இருவரும் சிறந்த துணையாகி விடுவீர்கள்.

♦6, நேர்மறை அணுகுமுறை

நீங்கள் உங்கள் வாழ்வில் எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் செயல் படுங்கள். உங்களது பிரச்சனைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள். நீங்கள் எப்போதும் அன்புள்ள, மகிழ்ச்சியான, பாசமான, அன்பான, அக்கறையுள்ள, அமைதியாய்
மற்றும் பல குணநலன்களுடன் எப்போதும் இருக்க வேண்டும். உங்கள் நேர்மறை எண்ணங்கள் உங்கள் கணவரின் மீது கண்களுக்கு தெரியாத மாயையாய் செயல்படும். உங்கள் கணவர் வேலை முடிந்து வீடு திரும்பிய உடன்,புன்னகையுடன் கட்டியணைத்து வரவேற்றிடுங்கள்.

எவ்வித மாற்றமுமின்றி அவருக்கு உறுதுணையாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்நாள் முழுவதும் இருங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.