சிட்டுக்குருவிகள் அழிவுக்கு முக்கிய காரணங்கள் என்ன..?

0 2,306

Reasons of declining of House sparrows

சிட்டுக்குருவிகள் அழிவுக்கு முக்கிய காரணங்கள்

1.வாழ்விடங்களின் அழிவு
அடைக்கல குருவி எனப்படும் இந்த வகை சிட்டுக்குருவிக்கு மரங்களில் கூடு கட்டத்தெரியாது நமது வீடுகளில் உள்ள பொந்துகள் மற்றும் இடுக்குகளில் வைக்கோல் மற்றும் நார்களை திணித்து முட்டையிடும்.நம்முடைய நவீன வீடுகளில் கொசு கூட நுழைய விடாமல் அடைத்து விடுகிறோம் இதில் குருவிக்கு இடம் ஏது.
ஆக குருவிகள் வாழ்விடங்களை இழந்தன
நமது இல்லங்களை தமது வாழ்விடங்களாக்கி கூடு கட்டி குஞ்சு பொரித்து குதூகலித்து திரிந்த இந்த சின்னஞ்சிறு உயிரைப்பற்றி நாம் கவலையின்றி நாம் வீடுகளை வடிவமைத்து விட்டோம்

2.உணவு தட்டுப்பாடு
அன்று முற்றத்தில் காய வைத்திருக்கும் தானியங்களை குருவிகள் தின்று பசியாரும். முற்றத்தில் சிந்தியிருக்கும் நீரை குடித்து குளித்து கும்மாளமிட்டு செல்லும் இன்று அதற்கு வாய்ப்பே இல்லை தண்ணீர் குழாய் வழியே வந்து குழாய் வழியே பாதாள சாக்கடைக்கு செல்கிறது.ஆக வந்தது தட்டுப்பாடு உணவுக்கும் நீருக்கும்

3.நவீன விவசாயம்
குருவிகள் தானியங்களை மட்டும்தான் உணவாக உண்டாலும் குஞ்சு பொரித்திருக்கும் சமயம் குஞ்சுகளுக்க.காக பூச்சிகளை பிடித்துவரும்.நவீன விவசாயம் என்ற பெயரிவ் பூச்சிக்கொல்லி விஷங்களை அதிக அளவில் பயன்படுத்தியதால் குருவிகளின் உணவு சங்கிலி பாதிப்புக்கு உள்ளானது

4. குருவிகள் பகல் பொழுதில் பெரிய வேட்டை பறவைகளிடமிருந்து தப்புவதற்கு அடர்ந்த மரங்கள் உதவின.
நாம் கட்டடங்கள் கட்டுவதற்காக மரங்களை வெட்டி விட்டோம்

5.சுற்றுச்சூழல் பற்றி கவலையின்றி காற்றையும்,நீரையும் மாசுபடுத்தியதன் காரணமாக குருவி போன்ற பல உயிரினங்களின் அழிவுக்கு காரணமாகிவிட்டோம்

இறுதியாக குருவிகளை அழிவில் இருந்து மீட்க என்ன செய்ய வேண்டும்

1.குருவிகளுக்கு நஞ்சில்லா தானியங்களை Feeder மூலமாவோ அல்லது மண்தட்டுக்களிலோ வைக்கவேண்டும்

2 தண்ணீர் சிறிய மண்தட்டுக்களில் வைக்கவேண்டும்

3. குருவிகள் கூடு கட்ட வீடு தோறும் சிறு மரப்பெட்டிகள் அல்லது மண்ணால் ஆன கூடுகளை வைப்போம் (அட்டைப்பெட்டி வேண்டாம்)

இன்னும் காலம் கடந்துவிடவில்லை அழிவின் விளிம்பில் நிற்கும் குருவிகளை காப்பாற்றுவோம் வாருங்கள் நண்பர்களே

The numbers of sparrows are declining. Some important reasons of declining are as follows:

Loss of habitat : Due to modern technology old spacious buildings have been changed to the shapes where sparrow do not find their habitat. It is the most important reason of decline of population.

Lack of feed : The old Kirana shops have been converted in to malls or big bazaar. In this type of bazaar and malls all the items are found in packets. So sparrows do not find their food grains which were available in old grocery shops

Modern Agriculture : modern agriculture is also a important reason of decline the numbers of sparrows. In modern agriculture insecticide and pesticides are widely used which adversely affect the birds directly and indirectly. When sparrows eat this types of fruits this affects in the formation of eggs shell. The numbers of insects decrease due to insecticides whose larvae are food of sparrows.

Pollution : Pollution is the most important reasons of declining the numbers of sparrows. Different types of pollution like water pollution, soil pollution, noise pollution, etc adversely affect sparrows.

Loss of tree cover : The deforestation is also a reason of decline of sparrows population. We are constructing modern buildings, malls, big bazaar, industries etc by destroying forest and plants.

Urbanization and Unplanned development : Urbanization and unplanned development are also the most important causes of decline of sparrows population.

It is our duty to save this small, lovable, beautiful and harmless bird for environment and for ourselves. Dont do bigger things. Only by doing smaller things you can give your support to save this bird and to save our environment.

Some important tips to save sparrows

Arrangement should be made for the availability of food grains and water for sparrows.

Try to minimize pollution as much as possible

Wisely use insecticides and pesticides. Over use of these substances are harmful in many ways.

You might also like

Leave A Reply

Your email address will not be published.