சாதியை நேசிப்பவரா நீங்கள்..? உங்களுக்கு என் கேள்வி..?

0 198

தனது சாதிக்காரன் நிலத்தில் பெப்ஸி கம்பெனி நீரை உறிஞ்சும் போது துடிக்காத சாதி….

தனது சாதிக்காரன் நிலத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் போது துடிக்காத சாதி…

தனது சாதிக்காரன் ஊரில் நியூட்ரினோ, அணு உலை என்று அபாயங்கள் வரும் போது துடிக்காத சாதி…

தனது சாதிக்காரன் சாராயம் குடித்துவிட்டு நடுரோட்டில் நிர்வாணமாக படுத்துக் கிடக்கும் போது துடிக்காத சாதி….

தனது சாதிப்பெண் வரதட்சணை கொடுமையால் வாழாவெட்டியாகும் போதோ, தற்கொலை செய்யும் போதோ துடிக்காத சாதி…

தனது சாதிக்காரன் வேலை வெட்டியில்லாமல் ஊரில் சுற்றும்போது துடிக்காத சாதி…

தனது சாதிக்காரன் கல்வி பயில முடியாமல் முறுக்கு விற்க கிளம்ப போது துடிக்காத சாதி….

சாதிவிட்டு சாதிமாறி திருமணம் செய்தால் மட்டும்… வெறிநாயாக மாறிவிடுகிறர்கள் சாதியை காக்கும் சாதிவெறிக் கூட்டம்.

சாதியை மற உயிர்களை மதி

You might also like

Leave A Reply

Your email address will not be published.