சாட்சியாக ஒரு மரம் நொடிக்கொரு முறை வாகனங்கள் கர்ஜித்துக் கடக்கும் இந்த நெடுஞ்சாலையில் புதையுண்டு கிடக்கின்றன ரெட்டைப் பனங்காய் வண்டியின் தடங்கள்!

0 363

பனங்காய் வண்டி ஓட்டாத, பனை ஓலையில் காற்றாடி பார்க்காத இன்றைய தலைமுறைக் குழந்தைகள், குழந்தைமை யின் அற்புதங்களில் சிலவற்றை இழக்கின்றன.

சென்னையில், மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பக்கத்தில் ஒற்றைப் பனை மரம் ஒன்று உண்டு.

அங்குதான் சில ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் படு கொலைக்காகச் சில இயக்கங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தின. ‘குறுத்தோலை ஞாயிறு’ போன்ற நிகழ்வுகளின் போது பனை ஓலையைச் சுமந்து செல்லும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.

வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடப்படு கிறது. இப்படியான சில நிகழ்வுகள் மூலமாகத்தான் தமிழர்களின் மனத்தில் பனை மரம் இடம்பெற்றிருக்கிறது.

இவ்வாறு தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி யாக விளங்கும் பனை மரங்கள், செங்கல் சூளை எரிபொருளுக்காக வெட்டப்படுகின்றன.

எனவே, அந்த மரத்தைச் சார்ந்திருக் கும் பனங்காடை, பனை உழவாரன் போன்ற பறவைகளும் வாழிட அழிவைச் சந்தித்து வருகின்றன.

மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது மனிதர்களுக்குப் புரியவில்லை. பறவைகளுக்குப் புரியும்

பதநீரும் கள்ளும்

பதநீருக்கும் கள்ளுக்கும் இடையே முடிச்சுப்போட்டுப் பார்ப்பது தவறான பார்வை. பதநீர் என்பது ஆரோக்கிய பானம். பனை மரத்திலிருந்து பெறப்படும் இனிப்பான சாற்றை, இயல்பாகப் புளிக்கவிட்டால் அது கள். சுண்ணாம்பின் துணைகொண்டு அதைப் புளிக்கவிடாமல் செய்தால் அது பதநீர். ஆனால், பனையிலிருந்து பதநீரை எடுப்பதை யும் ‘கள் இறக்குவது’ என்றே குறிப்பிடு கின்றனர். முன்னர், பல ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்து வந்த இத்தொழில், 1983-ல் ‘டாஸ்மாக்’ தொடங்கப்பட்டபோது, தடை செய்யப்பட்டது.

கள்ளின் காரணமாகப் பனை இழிவானதாகப் பார்க்கப்பட்டது. இதற்கு சமணம், வைதீகம் உள்ளிட்ட மதங்களுக்குக் கணிச மான பங்குண்டு. பிற்காலத்தில் வெளிநாட்டு மது வகைகளின் விற்பனையை அரசே ஊக்குவித்ததால் கள்ளோடு சேர்த்துப் பதநீர் தொழிலும் பாதிப்புக்குள்ளானது.

நுங்கும் பனங்கிழங்கும் உணவாகப் பயன்படுகின்றன. ஓலை, கூடைகள் முடையவும் கைவினைப் பொருட்கள் செய்யவும் கூரை வேயவும் பயன்படுகிறது. மரம், வீடு கட்டப் பயன்படுகிறது. பனஞ்சாறு பதநீராகவும் கற்கண்டாகவும் கருப்பட்டியாகவும் தமிழர் உணவுப் பழக்கத்தில் ஆரோக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தத் தகவல் களெல்லாம் ஓரளவுக்கு நமக்குத் தெரிந்தவைதான்.

உணவாக, மருந்தாக, கலைப்பொருளாகப் பனை பயன்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.