சல்லிகட்டில் டோக்கன் அரசியல்.‌..! தயவுசெய்து இனிமேலும் இதுபோன்று வேண்டாம்..! யாரும் ஏமாறவும் வேண்டாம்

0 377

எல்லா ஊர் ஜல்லிக்கட்டு நிர்வாகதிற்கும் சமர்ப்பணம்..

1.வாடிவசல் பின்புறம் நடக்கும் பிரச்சனை.

ஜல்லிக்கட்டு நடத்துறவுங்க டோக்கன் பதிவு செய்யும்போது நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க. எவ்வளவு மாடு அவிழ்க்க முடியும் னு ஊர்ல கலந்து பேசுங்க.

தோராயமா காலையில 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரையும் நடக்கும்னு வைங்க.மொத்தம் 8 மணி நேரம் .1மணி நேரத்திற்கு நிமிஷத்துக்கு 1 காளை னு வச்சாலும் 60 காளைகள் அவுக்கலாம். இதுல சுத்துமாடும் இருக்கும் அது நிர்வாக திறமை.
சரியான நிர்வாகமா இருந்தா 1மணி நேரத்திற்கு 100 காளைகூட அவுக்கலாம் அது உங்க திறமை.
அப்படி பார்த்தால் 8 மணி நேரத்திற்கு 800 காளைகளை அவுக்கலாம்.

இதற்கிடையில் அணி மாற்றம், மாடு திரும்பி வாடிக்கு வருதல், வீரர்கள் காயப்படுதல்,விருந்தினர் அழைப்பு, சிறுசிறு சலசலப்பு என இவளோ வேலைகள் இருக்கு. இதுக்கு எப்படியும் 1 மணிநேரம் போயிரும்.7மணிநேரத்துல 800 காளைகள் என்பது சிரமம்.
இதெல்லாம் யோசிச்சு டோக்கன் போடுங்க.நீங்க ஊர் பேருக்காக எவ்வளவு டோக்கன் வேணும்னாலும் போடலாம்னு சுலபமா போட்ரிங்க.

ஆன அதை வாங்கிகொண்டு அந்த டோக்கன் நம்பி மாட்டின் உரிமையாளர்கள் எவ்வளவோ தூரத்தில இருந்து உங்க ஊற நம்பி வராங்க. ஆன நிர்வாகம் vip மாடு,உள்ளூரமாடு னு சொல்லி அத்துக்கே பாதி நேரத்தை களிச்சிருங்க. வெளிமாவடத்துல இருந்து 5000,6000 னு வண்டி வாடகை குடுத்து வந்தவுங்க சோறு இல்லாம, தண்ணி இல்லாம கால்கடுக்க வருசைல நின்னு கடைசியா அந்த மாடு அவுக்கமுடியாம போனா எவ்வளவு மனஉழைச்சல்னு வாயில சொன்னா புரியாது.

அதை அனுபவிச்சாதான் தெரியும்.
உங்க ஊருக்கு மாடு கொண்டுவரவங்க எல்லாரும் பரிசுக்கு ஆசைப்பட்டு வரல. முக்கால்வாசி பேர் தன்னோட பெருமைக்கும், மாட்டோட பெருமைக்கும்தான் வராங்க.

அடுத்து அட்டி.

இவளோ செலவு பண்ணி ஜல்லிக்கட்டு வக்கிரத்துக்கு டோக்கன் போடுறிங்க. அதை டோக்கன் வரியில் விட்டால் பாதி துயரம் போயிரும்.
1லிருந்து 50 மாடு அடுத்து 50லிருந்து 100 மாடு னு அவுத்த எல்லாத்துக்கும் நல்லது. அந்த 1லிருந்து 50 மாடு வரை எப்படி வேண்டுமானலும் அடைக்கலாம். அப்படி டோக்கன் படி அடைக்கும் போது டோக்கன் எண்ணிக்கையில் அதிகமா இருக்குறவுங்க மாட்டையும்
நிழலில் அமர்த்தி அவுங்களுக்கும் ஒய்வு கிடைக்கும்.
அட்டி முறைப்படி அவுக்குறப்ப மாடும், மனுஷனும் ரொம்ப கஷ்ட படுறாங்க.

உரிமையாளர் கூட ஆள்மாரி நின்னுக்கலாம். ஆனால் மாடு வாயில்லா ஜீவன் முதல்நாள் ராத்திரியில் இருந்து மறுநாள் வரை அது நிக்கணும். அந்த மாடு வீட்ல இருக்கப்ப கொசு கடிக்காம கூட பாத்து பாத்து வளத்துட்டு இங்க வந்து இவளோ சிரமதத்தை அனுபவிக்குது. அதுக்கு கால் வழிச்சாக்கூட அதுனால சொல்லமுடியாது.
அதுனால எல்லா ஜல்லிகட்டுலயும் தயவு செய்து டோக்கன் படி மாடு அவுறுங்க.
டோக்கன் படி மாடு அவிழ்த்தா மாடும் மனுஷனும் காயம்படாமல் இருப்பாங்க.

2.வாடிவசல் முன்

மாடு அவுக்குறவுங்க எல்லாருக்கும் பரிசு தந்தாலும் தரலைனாலும் பரவாயில்லை. மாட்டோட உரிமையாளர் பேர் சொல்லுங்க. எல்லாரும் அதைத்தான் எதிர்பாத்து வராங்க.
மாடு அவுக்குறவுங்க எவ்வளவு பெரிய ஆள் இருந்தாலும் சரி , அரசியல் வாதி, தொழிலதிபர் யாரா இருந்தாலும் உங்க மாட்டை புடிக்கிறதுக்குத்தான் வாடிவசல் கொண்டுவரிங்க. முடிஞ்சா என் மட்டை கட்டி பாருன்னு சொல்ரத்துல இருக்கு கெத்துங்குறது. இந்த மாட்ட யாரும் புடிக்க கூடாதுனு சொல்றதுக்கு ஏன் ஓட்டிட்டுவரனும்.

பொதுமக்களும் போலிஸ்க்கு கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க. நம்ப பாசமா வளத்த மட்டை அட்டியல் மாட்ட திணிச்சு கொடுமை படுத்தாதிங்க.. மாடு கயிரடிக்கும் இடத்தில் மாடுப்புடிக்க அவங்களுக்கு வலிய விடுங்க. அவுங்க மாட்ட தொலைச்சுட்டு தேட நீங்க காரணம் ஆக வேண்டாம்.

தயவு செய்து கஷ்டப்பட்டு மீட்டெடுத்த ஜல்லிக்கட்டை அரசியலுக்கு எடுத்துட்டு போகாதிங்க. இந்த எல்லா விஷயமும் பல மாட்டின் உரிமையாளரின் மனதிலும் உள்ளது. நன்றி!

You might also like

Leave A Reply

Your email address will not be published.