சரும நோய்கள் தடுக்கும் யோகா

0 193

நமது சருமமானது தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்புடையதாகவே அமைந்துள்ளது. ஆனால், தற்போது முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கும் நிலையில், சருமத்தை நோய்களிலிருந்து பாதுகாப்பது முக்கியம். இல்லையென்றால் சரும வறட்சி, பருக்கள், தேமல் மற்றும் சில சரும நோய்கள் போன்றவை வர வாய்ப்புள்ளது.

சரும நோய்கள் மற்றும் அதற்கான மருத்துவ முறைகளையும் விளக்குகிறது இக்கட்டுரை… டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்: சருமம்தான் உடலின் மிக முக்கியமான அங்கமாகக் கருதப்படுகிறது. இது உணர்ச்சிகளை அறிதல், உறுப்புகளைப் பாதுகாத்தல், உடலின் சீதோஷ்ண நிலையை சீர்செய்தல், கழிவுகளை அகற்றுதல் என பலதரப்பட்ட வேலைகளைச் செய்வதாலும், வெளி உலகத்துடன் அதிக அளவில் தொடர்பு கொண்டுள்ளதாலும் பல வகையான நோய்களால் பாதிக்கப்படுகிறது. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள்: தேவையான அளவு நீர் பருகவும். பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறமுள்ள காய், பழங்களில் கரோடீன்ஸ் (carotenes) மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் (anti-oxidants) உள்ளன. அவற்றை அதிகமாக சாப்பிடவும். சாக்லேட், கொட்டை வகைகள், எண்ணெய்ப் பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிடவும். சீரான வாழ்க்கை முறையை மேற்கொள்ளவும். மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்க்கவும். மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். நன்றாகத் தூங்கவும்.

சுகாதாரத்துடன் சருமத்தை வைத்துக் கொள்ளவும். (தினமும் இரண்டு முறை குளிக்கவும். அதில் ஒருமுறை தலை குளிக்கவும். மிதமான சோப்புகளை மட்டுமே பயன்படுத்தவும். வாரத்திற்கு இரண்டு முறை ஷாம்பு போட்டுக் குளிக்கவும். உடலில் வியர்வை, ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்ளவும். சீப்பு, துண்டு, சோப், உள்ளாடைகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியர்வை உறிஞ்சும் லேசான ஆடைகளை பயன்படுத்தவும்.)

சரும நோய்கள்: சருமத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டவுடனே தோல் நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். இந்நோய்கள் விட்டுவிட்டு வரும் தன்மை உடையன. அதனால் தொடர்ந்து சிகிச்சை எடுப்பது அவசியம். சர்க்கரை நோய் உள்ளவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும் எளிதாகப் பாதிக்கும். அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தொற்றினால் ஏற்படும் நோய்கள்: கொப்புளம்/சீழ் கொப்புளம்/சிரங்கு: ஏற்கெனவே பாதிப்படைந்த சருமத்தை அல்லது சர்க்கரை நோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் சருமத்தை பாக்டீரியா (bacteria) தாக்கும் பொழுது இவை ஏற்படும். வலி அதிகமாகவும், சில சமயங்களில் அரிப்பும் இருக்கக் கூடும். ஓரிரு நாட்களில் சரியாகா விட்டால் மருத்துவரை அணுகவும். தேமல், பொடுகு, சேத்துப்புண், படர் தாமரை சருமத்தின் தன்மை அதிக வியர்வையாலோ, வேறு பல காரணங்களாலோ மாறும்பொழுது பூஞ்சை காளான் வளர்வதற்கு வழி வகுத்து, மேற்சொன்ன நோய்களை ஏற்படுத்தும். இந்நோய்கள் விட்டு விட்டு வரும். அழுக்குத் தேமல்: உடலில் வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் வெவ்வேறு அளவுகளில் முகம், மேல் மார்பு, முதுகின் மேற்பகுதிகளில் தேமல் ஏற்படும். இது, தொற்று வியாதி கிடையாது. பொடுகு: இதுவும் தொற்று வியாதி அல்ல. தலையில் சீபம் (sebum) எனப்படும் திரவம் அதிகமாகச் சுரப்பதாலும், அதிக வியர்வை, மன அழுத்தம் போன்றவற்றாலும் ஏற்படும். இதைக் குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.

Read more at : சரும நோய்கள் தடுக்கும் யோகா http://isha.sadhguru.org/blog/ta/saruma-noigal-thadukkum-yoga/

You might also like

Leave A Reply

Your email address will not be published.