சருமம் பளபளக்கணுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க.!

0 184

சருமத்துக்கு இளமையைக் கூட்டி, பளபளப்பைத் தருவது பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது பூசுவதாலும் அழகைப் பெற்றுக்கொள்ளலாம்.
பழ வகைகளில் அதிக அளவு முகத்தைப் பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி.
தன் சுவையால் நாக்கைச் சுண்டி இழுப்பதுபோல், அழகையும் இது அள்ளித்தருவது உண்மை என்கிறது அழகியல் ஆராய்ச்சி.

சிவப்பு நிறத்தில் ஜொலிக்க நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும்.
இந்தச் சாற்றை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.
வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால், முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும். சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும்.
இந்தக் கலவையை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள் மறைந்து பளிச்சென முகம் மாறும்.
இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும். சருமத்தில் உள்ள பெரிய துளைகளைச் சிறியதாக்கி, தொங்கிய சருமத்தை இறுக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.