சமூக வலைதளத்தில் நீங்கள் நம்பிய பொய்கள்..!

0 967

அழகுப்பனை…!!! (இது நம்ம பனை மரம் இல்ல)

கடத சில மாதமாக இணையத்தில் நம்ம பனைமரம் 120 வருடம் ஆனால் பூக்கும் கெட்டிச்செவியூர் அருகில் சுள்ளிகரடு பகுதியில் ஒரு மரம் பூத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது..

இதை பற்றி பனை மரத்துடன் அதிக தொடர்புடைய நம்ம ஊர் பெரியவர்கள் இடம் விசாரித்த போது நம் பனை மரத்தில் பாலை தான் வரும் எத்தனை வருடம் ஆனாலும் இது போன்று பூக்காது என்றனர்..

சரி எப்படி அந்தமரம் பூத்தது என்று பார்கலாம் என்று நண்பர்  நிருபர் சசி உடன் பனைமரம் உள்ள பகுதிக்கு கேமரா உடன் புறப்பட்டு சென்றோம்.

மரத்தை தூரத்தில் இருந்து பார்க்கும் போதே நமக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது. குறிப்பிட்ட தூரத்திலேயே பைக்கை நிறுத்திவிட்டு காட்டுக்குள் நடந்து பனைக்கு அருகில் சென்றோம் மிக பிரம்மாண்டமாக இருந்தது..!!!

கேமராவை எடுத்து புகைப்படம் எடுத்தோம் டெலி லென்சு மூலம் அந்த பிரம்மாண்ட பூவை பார்க்கையில் நம் கண்கள் வியப்பில் விரிந்தது.. இயற்கையின் அற்புதம்..!!! பூ மட்டுமே 7 அடி உயரத்துக்கு மேல் இருந்தது..!!!

இந்தப் பனை நம் பனை மரத்தைவிட பருத்து நல்ல அகலமாக இருந்தது மற்றும் இதன் ஓலைகள் மிகப் பெரியதாகவும் இதன் பட்டை 5 அடிக்கு மேல் நீளமாக இருந்தது.. இது நம் பனை மரத்தைவிட முற்றிலும் மாறுபட்டு இருந்தது..!!!

நம்ம நிருபர் வழக்கம் போல் தன் பாணியில் அக்கம் பக்கத்தில் விசாரிக்க தொடங்கினார்.. அங்கு ஆடு மேய்து கொண்டு இருந்த 60வயது பெரியவர் இந்த மரம் தண்ணீர்பந்தலை சேர்ந்த காட்டுக்காரர்து இந்த மரம் ஆரம்பத்தில் இருந்தே நம்ம பனை மாதரி பாலை எடுக்கவில்லை இதில் தெலுவும் ஏறவில்லை நொங்கும் போட்டதில்லை என்றார்.. மற்றும் இதனை சின்ன மரமாக இருந்த போது பார்த்ததாகவும் கூறினர்.. அவர் சொன்ன தகவல் படிபார்த்தாலும் இந்த மரத்திக்கு 60..70.. வருடம் தான் இருக்கும்.

தோற்றத்திலும் இயல்பிலும் பார்க்கும் போது இது நம்ம பனையில்லை.. இது ஒரு அழகுப்பனை.. கூந்தப்பனை மற்றும் பார்கிள் உள்ளது போன்ற அழகுபனை வகையை சாரந்தது.

நம்ம பன்னை ஒரு கற்பக விருக்ஷம் அது உயிர் உள்ள வரை நமக்கு வாரி வழங்கிக் கொண்டே இருக்கும் அற்புதம்..!!!

நம் நுங்கு வெட்டும் பனைமரம் பலநூறு வருடங்கள் வாழும் வரை காய்தத்துக்கொண்டே இருக்கும் ஆனால் கூந்தப்பனை ஒருமுறைகூட காய்க்காது வாழ்வின் இறுதியில் பூ விடும் பின்பு இறந்துவிடும்..!

இதை உண்மை என்று நம்பியவர்களுக்கு இதன் உண்மை தன்மையை பகிர்ந்து விளக்குங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.