சமிப காலத்தில் பரவிய வதந்தி UIDAI நம்பர் உங்கள் போனில் தனாகவே சேமித்துள்ளதா..?

0 654

UIDAI என்ற ஆதார் சேவை மைய உதவி எண்ணை தவறுதலாக அனைவரது செல்போனில் இணைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
விளக்கம்

” சர்ச்சைகளை அடுத்து UIDAI எண்ணை கூகுள் நிறுவனம் அனைவரது காண்டாக்ட் லிஸ்டில் முன் அறிவிப்பு ஏதுமின்றி சேமித்து உள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது. அதில், ஆன்ட்ராய்டு செட்டப் விசார்டில் தவறுதலாக ஆதார் உதவி மையம் இலவச அழைப்பு எண் கோடிங் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், 2014-ல் வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் தளத்தில் இருந்தது மட்டுமல்லாமல் புதிய சாதனத்திலும் அப்டேட் ஆகி உள்ளது “.

ஆன்ட்ராய்டு மட்டுமின்றி ஐஓஎஸ் பயனாளர்களின் செல்போன்களிலும் UIDAI எண்கள் சேமிக்கப்பட்டு உள்ளன. இந்த தவறை சரி செய்யும் பணியில் ஈடுபடுவதாகவும், புதிய அப்டேட் செல்போன் உற்பத்தியாளர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்து உள்ளது.

எனவே, UIDAI எண்கள் மூலம் தரவுகளை திருட ஹக்கர்கள் செய்த வேலை என வீண் வதந்திகள் வாட்ஸ் ஆஃப் மூலம் பரவுவதை பகிராமல் மற்றவர்களுக்கும் எடுத்துரையுங்கள்

மேலும் ஆதார தகவல்:
https://youturn.in/news/UIDAI_Helpline_number_google_added%20-20180805.html

You might also like

Leave A Reply

Your email address will not be published.