கோவை ஜல்லிக்கட்டில் கார், பைக் என மொத்தம் 15 ரூ லட்சம் பரிசுகளை அள்ளிய மாடுபிடி வீரர் கார்த்திக்

0 611

கருப்பாயூரணி கார்த்திக், இளம் வயதிலே யாரும் எட்டாத இடத்தை தன் வீரத்தால் வென்றிருக்கிறார். வாருங்கள் தொடருவோம் கோவை ஜல்லிக்கட்டின் நட்சத்திர நாயகன் கார்த்திக் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுவோம். தற்ப்போது மதுரை KLN கல்லூரியில் சிவில் பிரிவில் படித்து வருகிறார்.

கருப்பாயூரணி கிரமாத்தில் ராஜேந்திரன் – பரமு ஆகியோருக்கு மகனாக 1997 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையை சிறு வயதிலே பிரிந்த இவரை இவரது தாயார் தான் இன்று வெற்றி வீரனாக வளர்த்துள்ளார்.

கார்த்திக் தனது பத்து வயதில் ஜல்லிக்கட்டு காளைகளின் திமிலை தழுவ தயார் ஆனார். இவருக்கு குருக்களாக கருப்பாயூரணியை சேர்ந்த அர்சுணன், முனிச்சாமி, பாண்டி, செந்தில், ராஜசேகர், விஜி ஆகியோர்களுடன் சேர்ந்து மாடு பிடிக்க கற்றுக் கொண்டார். இவரது முதல் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர், அதில் நான்கு காளைகளை அடக்கி தனது வீரத்தை உலகரிய செய்தார். அன்று மேலவளவு அய்யனார் கோவில் காளையை பிடித்தனின் மூலம் அதிகமான பரிசு பொருள்களை பரிசாக பெற்றார், ஒரு பவுன் தங்க மோதிரம், தங்க காசு தையல்மிசின், அண்டா, குத்துவிளக்கு, என பல பரிசுகளை முதல் ஜல்லிக்கட்டிலே பரிசாக பெற்றார்.

பின்பு அதிகமாக மாடு பிடித்து சிறந்த வீரராக பாரப்பத்தி, பாலமேடு, அவனியாபுரம், S வளையபட்டி, திருப்பூர், ஈரோடு என 2018,2019 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு நட்சத்திர நாயகன் விருது பெற்றார். இந்த வருடத்தில் கோவை ஜல்லிக்கட்டில் தன் திறமையால் 13 காளைகளை தழுவி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு 2019 ஆண்டில் நட்சத்திர வீரனாக புகழாரம் பெற்றார். கார், பைக், 10 சென்ட் நிலம் மற்றும் பரிசு பொருள்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி வரும் அளவிற்க்கு பரிசுகளை பெற்றிருந்தார்.

இது தவிர 2018 ஆண்டு நடந்த வடமஞ்சுவிரட்டில் வடமஞ்சுவிரட்டு சூப்பர் ஹுரோவாக வலம் வந்தார். 4 வடத்தில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார். இவர் களத்திற்க்கு வந்தாலே பார்வையாளர்களின் கரகோஷம் காது தெறிக்கும். 80 மேற்ப்பட்ட வடமஞ்சுவிரட்டில் கலந்து கொண்டுள்ளார், வாடி ஜல்லிக்கட்டில் 150 ஜல்லிக்கட்டுக்கும் அதிகமாக கலந்து கொண்டுள்ளார். இவர் வாங்கிய பரிசு பொருள்களை கொண்டு தனியாக பர்னீச்சர் கடை தொடங்கும் அளவிற்க்கு பரிசை குமித்துள்ளார்.

கோவையில் 17 தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த கோவை ஜல்லிக்கட்டில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்ட கார்த்திக்கு ஒரு கார், ஒரு பைக், 2 பிலாட் ( 10 சென்ட் நிலம்) 20 தங்க காசு, பீரோ, கட்டில், அண்டா, பானை என பரிசுகளை வழக்கம் போல் குமித்துவிட்டார். ஊர் திருப்பிய கார்த்திக்கு அவரது நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் வாழ்த்தி வரவேற்றார்கள். வேட்டு வெடித்து கொண்டாடினார்கள்.

கார்த்திக்கை கௌரவிக்கும் போது தனது குருவான அர்சுனனை மேடையில் ஏற்றி தனது வெற்றிக்கான பெரும் பங்கு தனது குருக்களுக்கே சேரும் என்று பெருமிதத்தோடு கூறினார்.

கார்த்திக் பிடித்த காளைகளின் வீடியோ தொகுப்பு :

இனி நடக்கும் அனைத்து ஜல்லிக்கட்டிலும் கலந்து கொண்டு தன் வெற்றியை தன் தந்தைக்கு சமர்பிக்க ஆயுத்தமாக உள்ளார். இவரது அம்மா பரமு கொத்தனார் வேலை பார்த்து பாசமாக வளத்தாலும், ஆண்மைக்கு அழகான வீரத்திற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதற்க்காகவே இவரை அனைத்து ஜல்லிக்கட்டிலும் கலந்து கொள்ளுவதை பெருமையாக நினைத்து பச்சைக் கொடி காட்டுவது அனைவருக்குமே சந்தோஷம் தான்….

என்றுமே நட்சத்திர நாயகனாக வலம் வர வாழ்த்துக்கள் கார்த்திக்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.