கோடை வந்துடுச்சி மெரினாவா மறந்துடாதீங்க..! மறந்துட்டிங்களா..?

0 214

கோடை வெயில் தனது கோர முகத்தை இப்போதே காட்டத் தொடங்கிவிட்டது. உச்சிவேளை வெயிலில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு சூரியன் சுள்ளென்று சுட்டெரிக்கிறது.

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க உடல் சூட்டை தணிக்கும் பானங்களை தேடத்தொடங்கியுள்ளனர் மக்கள். ஆனால் மக்களே ஒன்றை மறந்துவிடாதீர்கள் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பாரம்பரியத்தை காப்போம் அந்நிய பானங்களை தூக்கியெறிவோம் என்ற உறுதிமொழி நினைவில் இருக்கிறதா.

அந்நிய பானம்

கோடை காலம் வந்தாலே அந்நிய நாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு குஷி தான். வேற என்ன மக்கள் அவர்களின் குளிர்பானங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள் இதனால் விற்பனையும் அள்ளிடும்ல. ஆனால் ரொம்ப வெயில் இல்ல ரொம்ப கிரக்கமா இருந்தா 35 ரூபா கொடுத்து பெப்ஸி, கோக் வாங்கி பருகி உங்களுடைய ஆயுளை குறைச்சுக்காதீங்க

20 ரூபாய் முதலே கிடைக்கிறது இளநீர், 10 ரூபாய் தான் தர்பூசணி, 5 ரூபாய் தான் நுங்கு , 5 ரூபாய் தான் எலுமிச்சை , 5 ரூபாய் தான் வெள்ளரிப்பழம், 40 ரூபாய் தான் திராட்சை. இவற்றை வாங்கி உண்பதன் மூலம் உடம்பில் இருக்கும் சூடும் தனியும் நம்ம விவசாயிகள் வாழ்க்கையும், நாடும் செழிக்கும்

நீங்க வாங்குற ஒவ்வொரு இளநீரும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு வேளை சாப்பாடு. நம்ம நாட்டு விவசாயத்தைக் காக்க இன்று முதல் முயல்வோம், பெப்ஸி, கோக் போன்ற குளிர் பானங்களை விட்டுட்டு வாழ்வோம்.

விவசாயத்தை காப்போம், விவசாயியை வாழ வைப்போம், அந்நியனை விரட்டியடிப்போம். ஒரு நாட்டில் விவசாயம் தழைத்தால் தான் அந்த நாட்டின் வளர்ச்சியும் முன்னேற்றப்பாதையில் இருக்கும் என்பதை மறக்காதீர்கள். வேண்டாம் கெமிக்கல் பானங்கள் என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.