கொத்தமல்லி தழையில் விசம் எச்சரிக்கையாய் இருங்கள்..! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

0 659

இந்திய சமையலில் கொத்தமல்லிக்கு ஒரு தனி இடம் உண்டு. ரசமோ, குழம்போ ,வரட்டல் ,பிரட்டல் எதுவென்றாலும் கொத்தமல்லி தழையை கடைசியில் சேர்க்காமல் அது முழுமைப் பெறுவதில்லை. அதன் வாசனையே தனி தான்.
ஆனால் கொத்தமல்லி தழை வடிவில் ஒரு விஷச் செடி உண்டு.

அது பார்ப்பதற்கு கொத்தமல்லி இலை போலவே இருந்தாலும் சிறு சிறு வித்தியாசங்கள் காணப்படும். இதன் பெயர் ‘பார்த்தீனியம்’. கொத்தமல்லி தல கட்டுடன் கலந்து வருகிறது.

இதன் பூர்வீகம் அமெரிக்கா. ஆனால் நம் நாட்டில் இது ஒரு களைச் செடி ஆகும்.
இது ஆக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும். பூக் கப்பட்ட பூக்களில் சிறுசிறு மகரந்தம் போன்ற பொருட்கள் காற்றில் கலந்து ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.(allergy) விலங்குகளின் உடலில் படும்போது ஒருவகை அரிப்பு ஏற்படுகிறது.

இதனால் ஒவ்வாமை, ஆஸ்துமா ,கரப்பான், குருதிச் செவ்வனு நலிவு(ஈசினோபீலியா) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தச் செடியை பசுக்கள், ஆடுகளும் போன்ற கால்நடைகள் உணவாக உட்கொள்ளும்போது பால் கசப்பாக மாறுவதுடன் சிறிதளவு நச்சுத்தன்மையும் கொண்டிருக்கும்.

கொத்தமல்லி 1 பார்த்தீனியம் 2

இது கொத்தமல்லி இலை போலவே இருந்தாலும் வித்தியாசங்கள் காணலாம் . இலைகளில் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
மக்கள் வித்தியாசம் அறிந் வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.