கொடுக்காபுளியெல்லாம் இப்போ பலபேருக்கு கிடைக்குறது இல்ல ஆனா இனிமே அதோடோ விலை உயரபோது அப்புடின்னா நம்புவீங்களா..?

0 723

கிராமப்புறங்களில் சாதாரணமாக கிடைத்த கொடுக்காபுளி, இன்று ஆப்பிளுக்கு இணையாக, விலை உயர்ந்துள்ளது.

கிராமப் பகுதிகளில் அதிகளவில் வளர்ந்து, காய்த்து தொங்கும் கொடுக்காபுளி, சிறு பழ வகையைச் சேர்ந்தது.

சிறிதளவு இனிப்பு மற்றும் துவர்ப்புடன் உள்ள, மருத்துவ குணமிக்க கொடுக்காபுளி, சர்க்கரை போன்ற நோய்களை கட்டுக்குள் வைக்க கூடியதாக கருதப்படுகிறது. கிராம புற மாணவர்களுக்கு, கொடுக்காபுளியின் அறிமுகம் உண்டு.

ஆனால், இன்றைய நகரத்து குழந்தைகளுக்கு கொடுக்காபுளி பற்றி, அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் வரை, சர்வசாதாரணமாக கிடைத்த இந்த பழம், இப்போது, சென்னையில் ஆப்பிள் விலைக்கு இணையாக, 1 கிலோ, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதைப்பற்றி தெரிந்தவர்கள், ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

கிராமங்களில் பரவிகிடக்கும் இந்த மரம் இன்று நகரங்களில் எட்டா கனியாக இருக்கிறது.

ஆயுர்வேதத்தில் கொடுக்கா புளியின் மருத்துவ குணங்கள் நன்கு அறியப்பட்டு பரிந்துரைக்கப் படுகிறது.

அது செரிமானம் மேம்படுத்தவும், கீழ்வாதம் மற்றும் சில கருப்பை நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது புண்களை குணப்படுத்தும்.

வாத நோய் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் நோய்வாய் பட்டு சரியானதும் உடல் சூட்டில் பேதி ஆகாமல் இருக்க கொடுக்காபுளி தரப்படுகிறது.

உடல் எடை குறைய மிகவும் அற்புதமான மருந்தாக ஆயுர்வேதம் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் பரிந்துரைக்கிறது. குடல் அழற்சி, பெருங்குடல் தொடர்பான எந்த பிரச்சனைக்கும் இது நல்ல மருந்து

You might also like

Leave A Reply

Your email address will not be published.