குழந்தை பெற்ற, குழந்தைகள் வளர்க்கும் பெற்றோர்களே..! உங்கள்களுக்காக தான் இப்பதிவு..!

0 209

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக்கொண்டே இருந்தது.

உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்,மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.

இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது.அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது. மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய்,அதை நினைத்து நீ சந்தோஷ பட்டிருக்கிறாயா என்றது, மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.

இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்,அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்தவேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது. தன் தவறை உணர்ந்த மயில் மைனவிற்கு நன்றி தெரிவித்தது.

நம்மிடம் இருக்கும் பலத்தை பயன்படுத்தி நமது பலவீனத்தை எதிர்கொள்ள வேண்டுமென்பதே இக்கதையின் நீதியாகும்

குழந்தைகளிடம் உள்ள திறமையை முதலில் வெளி கொண்டு வாருங்கள்…!

You might also like

Leave A Reply

Your email address will not be published.