கிடைமாடு இதுவரை மேய்த்து பழக்கம் உண்டா? வாருங்கள் பேசிக்கொண்டே கிடைமாடு மேய்க்க போகலாம்…

0 652

மாடு மேய்ப்பது என்பது எளிதான வேலை தான் ஆனால் மாடுகளின் பாசை பேச தெரிந்து இருக்கனும்…. மாடுகளுக்கும் மனிதர்களும் மொழி என்பது இருக்கா என்று சந்தேகிக்க வேண்டாம்… இங்கு மொழி என்பது மாடுகளின் மேல் உள்ள பாசம் தான்.

கிடைமாடு மேய்ப்பவர் பெரும்பாலும் பரம்பரை தொழிலை விட்டு கொடுக்காதவர்களே, சொத்து அதிகமாக இருந்தாலும் மாடு மேய்ப்பது என்பது இவர்களது தனி சுகம். அந்த சுகமான வாழ்க்கைக்கு நடுவே உள்ள சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வோம்…

அனைத்து இன மாடுகளுக்கும் மாட்டு மந்தை இருக்கும் மலைமாடா இருந்தாலும், புலிக்குளம், உம்பளச்சேரி, பர்கூர் என்று அனைத்து மாடுகளும் அந்த அந்த மாடுகளின் சூழலுக்கேற்ப மாட்டு மந்தை அமைத்து அந்த மாடுகளை பாதுகாத்து வருவது ஒரு சிலரின் பாரம்பரிய தொழிலாகவே உள்ளது. அதை போல் தான் புலிக்குளம் மாடுகள் அதிகம் காணப்படும் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் புலிகுளம் மாடுகளை பலர் பாதுகாத்து வருகிறார்கள். குறிப்பாக மதுரை, சிவகங்கை, விருதுநகர் பகுதிகளில் அதிகமான மாட்டு மந்தைகள் போட்டு பாதுகாத்து வருகிறார்கள்.

ஏதோ ஓர் மந்தைக்கு செல்வதாய் நினைத்துக்கொள்வோம், நீங்களும் மாடு மேய்க்க தயார் நிலையில் வாங்க…

கிடைமாடுகள் வைத்திருப்போர்கள் நாடோடிகளாக நினைக்க வேண்டாம்! கிட்டதட்ட அப்படி தான்… மாடுகளை பாதுகாக்க அவர்களின் வாழ்க்கையும் நாடோடிகள் போன்று தான்… 200 ,300 மாடுகளை வைத்துக்கொண்டு புல்லுக்காக தினமும் இடம் விட்டு இடம் நகன்று கொண்டே செல்ல வேண்டும். தண்ணீர் பிடிப்பு உள்ள பகுதிகளுக்கே சென்றால் தான் பசுமையும் தண்ணீரும் மாடுகளுக்கு கிடைக்கும் நமக்கு குடிக்க அதை தண்ணீர் தான். 300 கிடைமாடுகள் முன்னோக்கி சென்றால் 20 கன்றுகளும் கூட்டிக்கொண்டே தான் செல்ல வேண்டும். ஓய்… ஸ்ஸ்ச்ச்ச்… ட்டுடூடூ… என்று ஏதோ ஒரு பாசையில் மாடுகளுக்கு வழி சொல்லிக்கொண்டே போக வேண்டும்.

தண்ணீர் இருக்கும் குளத்தில் ஒரு பாட்டில்களில் தண்ணீரை நிறப்பிக்கொண்டு அதையும் தோள் மேல் போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். வெயிலின் கொடுமை அதிகரித்தால் ஒரு ஓலையை வெட்டி தலை மேல் பிடித்துக்கொண்டு மாட்டு பின்னாடி ஓடித் தெரிய வேண்டும். அதை நேரத்தில் பசு கன்று ஈன்றால் அதையும் நம் தோள் மேல் போட்டுக்கொண்டு நடந்து செல்ல வேண்டும். பசும் புல் சென்ற இடமெல்லாம் கிடைத்து விடாது. ஊருக்கு நாலு தாட்டியக்காரன் இருப்பான் அவனுக்கு காசோ அல்லது கன்று கொடுத்தால் தான் அந்த பகுதிகளில் மேய அனுமதிப்பான்.

இரவு நேரத்தில் அனைத்து மாடுகளையும் ஒன்றாக இடத்தில் சேர்த்து மாடுகளில் கன்றுகளை பால் குடிக்க விடவேண்டும். கன்று குடிக்காத பசுகளில் நாம் தான் பால் பீச்ச வேண்டும். நம் உணவுக்கு அருகே உள்ள ஊருக்குள் சென்று காய் கறி வாங்கி வந்து அரைகுறையா சமைத்து சாப்பிட வேண்டும். இரவின் குளிரில் படுத்து தூங்க போது, மாடு கத்தினாலோ அல்லது பாம்பு பூச்சி வந்தாலோ அதையும் நாம் தான் போய் கவனிக்க வேண்டும். இதில் திருடர்கள் வேற….

கிடை மாடுகளை வெளியேற்றி மாட்டின் சாணங்களை அள்ளிப்போட்டு அதை அலைச்சலோடு மீண்டும் மாடுகளின் பின்னால் சென்று மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி செல்ல வேண்டும்… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான் மாடுகளோடு ஊர் திரும்ப முடியும். நல்ல மலை பெய்தாலும் மாடுகளுக்கு கானை போன்ற பரவல் நோய்களும் தாக்கும். போற வழியில் நாட்டு வைத்தியம் முறைகளை நாமே கையாடல் வேண்டும். இவ்வளவு கஷ்டம் எங்களுக்காக படவில்லை, இந்த மாட்டினத்தை பாதுகாக்கவே. வருமாணம் வரும் ஆனால் அதை அனுபவிக்க முடியால் தவிக்கின்றோம். காடு மலை பகுதி எல்லாம் சுற்றி, கால் படதா ஏரியாவை இல்லை அவர்களுக்கு. மாடு மேய்த்தது போதும் ஒரே நாளில் வெறுத்து போயிறுப்பிங்க, நாட்டு இனத்தின் உண்மையான பாதுகாவலர்கள் இவர்களே புரிந்து கொள்ளவே இந்த கட்டுரை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.