காலத்தை வென்றதா கல்லணை..? தமிழா உம் புகழை பார்..!

0 197

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியி ல் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால்,

அது சாதாரண விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக் கட்டுவதற்கும் ஒரு வழியைக்
கண்டுKallanai (1)பிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச்செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திர மாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின்மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பி ன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே, தண்ணீரில் கரையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக் கொள் ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்தான் இந்த அணையைப் பற்றிப் பல காலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார். காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ‘தி கிராண்ட் அணைக்கட்’ என்றார் சர் ஆர்தர் காட்டன். அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று

You might also like

Leave A Reply

Your email address will not be published.