கழிவறை உள்ளே செல்லும் போது அந்த மகளையும் உள்ளே அழைத்துக் கொண்டே போக பார்ப்பவர்கள் பல கோணங்களில்….

1 1,542

எங்கே போகிறோம் நாம்

கடந்த வாரம் காலை ஏழு மணிக்கு பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம்,
கொஞ்ச நேரத்தில் டாய்லெட் போக ஓபி வார்டுக்கு எதிரில் உள்ள கழிவறை வாசலில் காத்துக் கொண்டிருந்தேன், காலை வேளை என்பதால் கூட்டம் அதிகம் தான், மூன்று கழிவறை, சிறுநீர் கழிக்க சில யூரினல்ஸ்.

நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் ஏழு அல்லது எட்டு வயது கடந்த சிறிமியை கையில் பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று கொண்டிருந்தார், நிறைய நபர்கள் அவரை பார்த்து “பொண்ண வெளிய உக்கார வச்சிட்டு வா” வென அவரிடம் கொஞ்சம் கோவமாகவே எச்சரிக்கும் தொனியிலேயே சொல்லியும், அவர் கழிவறை உள்ளே செல்லும் போது அந்த சிறுமையை உள்ளே அழைத்துக் கொண்டே போய் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தார், அந்தக் குழந்தையும் அவருடனே அப்பா அப்பா என, கையை பிடித்துக் கொண்டே உள்ளே சென்றது வெளியே வந்தது.

பார்த்ததிலிருந்து மண்டை குடைச்சல், பல கேள்விகள்.

சில ஆயிரம் பேர் இருக்குமிடத்தில், குழந்தையை யாரை நம்பி உட்கார வைத்துவிட்டு செல்வதென யோசித்து இருப்பானா?

மருத்துவமனை போன்ற வளாகங்களுக்கு வரும் போது பெண் குழந்தையை அழைத்து வரும் போது ஆண்களுக்கு அது எந்த உறவுமுறையானாலும் இருக்கும் சிக்கல்கள் எப்படியானது?

குழந்தைகளை கவனித்துக் கொள்ள Day care போன்று சென்டர்கள் உள்ளே இருந்தால் பலருக்கு வசதியாக இருக்குமே?

வயது வித்யாசமின்றி அந்தத் தகப்பனை விட சிறுமியை கடும் கோபத்தோடு பார்க்க காரணம் என்னவாக இருக்கும்?

இந்த குழந்தையை உடன் வந்து பாத்துக்க ஒரு உறவோ நட்போ கிடைக்காமல் ஒரு வாழ்வு இருக்குமானால் அது எவ்வளவு பெரிய துன்பம்?

இத்தனைக்கும் மேலாக ஒரு குழந்தைதையை நம்மை நம்பி கொடுத்துச் செல்லும் அளவுக்கு யாருமே நம்பகத்தன்மை கொடுக்க முடியவில்லையே?

மனிதன் பாலூட்டியிலிருந்து வைரஸ் போன்று கிருமி உலகத்துள் அடி எடுத்து வைத்து விட்டானோ?

இதெல்லாம் அன்றாட வாழ்வில் இயல்பென ஏற்கும் மனமுமில்லையே.

எங்கே போகிறோம் நாம்.

#பாஸ்கி

முகநூல் பகிர்தல்

You might also like
1 Comment
  1. JOHN says

    its very sad

Leave A Reply

Your email address will not be published.