கலப்படத்திற்கு முற்றுப்புள்ளி சாம்பார் பொடி இனி நீங்களே தயாரிக்கலாம்..!

0 657

சாம்பார் பொடி தேவை என்றாலே நாம் கடைக்குச் செல்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே சுவையான சாம்பார் பொடி தயார் செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி என்று பார்ப்போம்….

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு – 100 கிராம்

கடலைப்பருப்பு – 50 கிராம்

மிளகாய் வற்றல் – 1/4 கிலோ

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மல்லி (தனியா) – 1/2 கிலோ

மிளகு – 20 கிராம்

சீரகம் – 20 கிராம்

வெந்தயம் – 5 கிராம்

பெருங்காயத்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வத்து கொள்ளலாம். இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.

இதோ சாம்பார் பொடி தயாராகி விட்டது. இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் ககவென்று மணக்கும். இதில் சாம்பார் வைக்கும் போது மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

குறிப்பு:

சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.