கன்னி என்ற நாய் இனத்திற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு தெரியுமா..?

0 855

கன்னி நாய் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கோவில்பட்டி, கழுகுமலை, Kileral, கோடாங்கிப்பட்டி, சிவகாசி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணக்கிடைக்கிறது.

இந்த நாயின் பெயர் கன்னி (அதாவது கன்னி கழியாத பெண்) என்ற பெயர் வருவதற்குக் காரணம், இந்த நாய்கள் திருமணத்திற்கு முன்பு மணமகனுக்கு பரிசாக வழங்கப்பட்டது, அதாவது சீர் பொருட்களில் ஒன்றாக இந்த நாயும் தரப்பட்டது. இதனால் இந்த நாயிக்கு கன்னி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கன்னி நாயை வளர்பவர்கள் பொதுவாக விற்பதிதில்லை, வீடுகளிலேயே வைத்துக்கொள்கின்றனர்.

ஆனால் அவற்றை நன்றாக பார்த்துக்கொள்ளதாக உறுதியளிப்பவர்களுக்கு அன்பளிப்பாக அளிப்பர். இந்த நாய்களை வளர்பவர்கள் இவற்றைத் தெருவில் சுற்ற அனுமதிப்பதில்லை, செல்லப்பிரானிகளாக மட்டுமே வளர்க்கின்றனர்.

இவற்றிற்கு காலை உணவாக பாலும், மதிய உணவாக சோளக் கஞ்சியும், மாலை உணவாக கேழ்வரகுக் கஞ்சியும் தரப்படுகிறது. இறைச்சி வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தரப்படுகிறது. இந்த இன நாய்கள் மிக அரிதானதான ஒன்றாக, அழிவின் விளிம்பில் உள்ளது. இந்த இனத்தில் மாதிரிகள் சில மட்டுமே உள்ளன. இந்த இனத்தை காக்க எந்த முயற்சிகளும் இருப்பதாக இல்லை. இதனால் இவற்றைப் பற்றி குறைந்த தகவல்களே உள்ளன.

எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் அவளின் திருமணத்திற்கு சீர் செய்ய இந்த வகை நாய்களை கடந்த மூன்று வருடமாக வாங்க முயற்சித்தோம் இன்று வரை கிடைக்கவில்லை ஆனால் அந்த ஆசை உங்களால் நிறைவேறியது என்றார் எங்களிடம் கன்னியை பெற்ற திருச்சியை சேர்ந்த நபர்..!

அவரின் நினைவாகவே இப் பதிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.