கடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை என்றார்கள்..!

0 569

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நிறுவனங்கள்

தொழிலாளர்களுக்கு தற்காலிக விடுமுறை அளித்து சமாளித்துக் கொண்டு இருக்கும் நிலையில் இதே நிலை இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்தால் விரைவில் பல ஆட்டோ மொபைல் கம்பெனிகள் மூடப்படும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் விவசாயி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கார் கம்பெனிகளுக்கு ஒரு அசத்தலான கேள்வியைக் கேட்டுள்ளார். தக்காளி விலை 30 ரூபாய்க்கு விற்கும் போதும் நாங்கள் விவசாயம்செய்தோம், 3 ரூபாய்க்கு விற்கும் போதும் விவசாயம் செய்தோம்.

ஆனால் அதே நேரத்தில் காரும் தக்காளியும் ஒன்றா? இரண்டையும் ஒப்பிடக்கூடாது என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரும் தக்காளியும் ஒன்றில்லை. ஆனால் தொழில் நசிவடையும்போது மாற்று வழியை தேட வேண்டுமே தவிர நிறுவனத்தை மூடக்கூடாது என்றே பலரது கருத்தாக உள்ளது

காரும் தக்காளியும் ஒன்றில்லை என்கிறீர்கள் சரி..! தக்காளி இரண்டு ரூபாய்க்கு விற்பனை ஆகும் போது நீங்கள் அப்போதும் பேரம்பேசிதான் வாங்கினீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்..!

காரை குறைவான விலையில் விற்றால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது முதலாளிக்கு லாபம் வராது என்கிறீர்கள்..!

தக்காளி இரண்டு ரூபாய்க்கு விற்பனை ஆனபோது கூட தொழிலாளிகளின் கூலியை நாங்கள் குறைக்கவில்லை தொழிலையும் நிறுத்தவில்லை என்பதை நீங்களும் உங்கள் முதலாளியும் புரிந்தது கொண்டால் சிறப்பாக இருக்கும்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.