ஓராண்டில் இது இரண்டாவது முறை பூமி நம்மை திருப்பி அடிப்பது ! எச்சரிக்கை

0 487

இயற்கை நம்மை விட வலியது ;
மீண்டும் ஒரு எச்சரிக்கை!

பூமி மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது ! நாம் அறிவியல் வளர்ச்சி என்று செய்த வன்மங்களை எல்லாம் மெதுவாக நமக்கு திருப்பிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது 🙁
ஓராண்டில் இது இரண்டாவது முறை பூமி நம்மை திருப்பி அடிப்பது !

நம்மை புரிந்து கொள்ள சொல்கிறது “நாமும் (மனிதர்களும்) இயற்கையின் ஓர் அங்கமே என்று” ! நிறுத்திக் கொள்ள எச்சரிக்கிறது நமது இயற்கை சுரண்டலை ;

மேற்கத்திய அறிவியலில் உச்சம் தொட்ட நாடுகளாக முற்போக்கு சிந்தனையாளர்களால் கருதப்பட்ட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஐப்பானும் செய்வதறியாது கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறது இயற்கை அவர்களை பந்தாடுவதை ;

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

இயற்கை சாராது மிதித்து சூரையாடி கொள்ளையடித்து வளர்ந்தவர்கள் அதனாலேயே அழிவார்கள்! இது தான் விதி :-!

இது நமக்கும் பொருந்தும்; இது நமக்கு விடப்படும் ஓர் எச்சரிக்கை! இனி நாம் இயற்கை சார்ந்த வளர்ச்சியை முன்னெடுக்காமல் திரும்பவும் அவன் செஞ்சான் இவன் சொன்னானு மதியில்லா இயற்கைச் சாராத அறிவியலை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தோம் என்றால் நாமும் வெகு நிச்சயம் வெகு விரைவில் அழிவோம் !

தமிழகத்தின் முக்கிய சுற்றுச்சூழல் கேடிற்கு சிப்காட்டும் அதில் இருக்கும் பல நச்சு ஆலைகளும் ஒரு காரணம் ! தூத்துக்குடி, பெருந்துறை, கடலூர் என 20 இடங்களில் நம் நீரை உறிஞ்சி சாக்கடை ஆக்கி காற்றையும் நிலத்தையும் கெடுத்து வருகிறது :'( இதெல்லாம் யோசிக்காமல் இதை கொண்டு வந்தது தான் வளர்ச்சி என கருதி பாராட்டுரைகள் பல ! சிப்காட் வந்ததுதால்தான் ச்டெர்லைட் வந்தது அதனால்தான் பலர் இறந்தனர் எல்லாவற்றிற்கும் ஆரம்ப புள்ளியை நீங்களே யோசியுங்கள் ;

தூத்துக்குடி துப்பாக்கி சூடு அப்ப அழுதுட்டு இப்ப பாராட்டு பாடுனவங்க எல்லாம் நிதானமாக யோசித்துப் பாருங்கள்; புரியும் !

காட்டு தீ ???? :

அமெரிக்கா — 33,62, 431 ஏக்கர் கருகியது

கனடா — 1977534 ஏக்கர் கருகியது

ஐரோப்பா — 100000 ஏக்கர் கருகியது

காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகளால் இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 110 பேருக்கு மேல் மரணம் !

வெப்ப அலைகளால் ஐரோப்பாவில் இரும்பு பாலங்கள் வலைந்தது ! பயணிக்க தடை.

வெள்ளம்:

ஜப்பான், பிரான்சு, சீனா, இந்தியா, கிழக்காசிய நாடுகள் !
கேரளா, ஜப்பானில் பல வீடுகளில் தரையோடு அடித்து செல்லப்பட்டது

180க்கும் மேற்ப்பட்டவர்கள் உயிரிழப்பு !

ஜப்பானில் வெள்ளம் முடிந்த உடனே வெப்ப அலைகள் தாக்கம் ; விளையாடுகிறது இயற்கை !

பஞ்சம் :

ஆஸ்திரேலியா, சுவீடன், ஜெர்மனி, இங்கிலாந்து, சவிட்சர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா !

நிலநடுக்கம் :

இந்தோனேஷியா 347 பேர் பலி நேற்று வரை

ஜனவரி 2018யில் நடந்த இயற்கை எச்சரிக்கைகள் :-

https://m.facebook.com/story.php?story_fbid=10204261141686581&id=1769307998

வளர்ச்சி என்பது இயற்கை சார்ந்து தற்சார்பாக வளர்வதே! இனி ஒவ்வொருவரும் இயற்கை சார்ந்த தற்சார்பை நிதானமாக முன்னெடுப்போம் தலைமுறைகளைக் காப்போம் 🙂

#மகிழ்வித்துமகிழ்
#தற்சார்பு
#இயற்கைவலியது

You might also like

Leave A Reply

Your email address will not be published.