ஒரேயொரு மாணவிக்காக இரயில் சேவயை நிறுத்தாத அரசு எங்கே — 600 பள்ளிகளை மூடும் அரசு எங்கே..?

0 241

ஜப்பானில் கியூ -ஷரத்தாகி ஒரு தீவு ஆகும் .இந்த தீவில் உள்ள இரயில்நிலையம் வேறெந்த பயணிகளும் இல்லாத நிலையிலும் அங்கிருந்து பள்ளி சென்று வந்த இந்த ஒரேயொரு பள்ளி மாணவிக்காகஅந்த பெண் பள்ளி படிப்பு முடிக்கும் வரை தொடர்ந்து பல ஆண்டுகள் இரயில் சேவையை தொடர்ந்தது

ஒரே ஒரு மாணவியின் கல்விக்காகக அந்த ரயில்வே அரசாங்கத்தின் அக்கறை சிலிர்க்க வைக்கிறது

இதை இப்பொழுது சொல்ல காரணம் 100 மாணவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் உள்ள சுமார் 600 கிராமப்புற அரசு பள்ளிகளை மூடுவதாக தமிழக அரசு முடிவு எடுத்திருப்பது கண்ணீரை வர வைக்கின்றது

வேறெதையும் விடவும் கிராமத்தில் உள்ளஅடுத்த தலைமுறைக்கு கல்வியை மறுப்பதை விட வேறெந்த உச்சகட்ட கொடுமையையும் நாம் செய்திடல் முடியாது

ஒரேயொரு மாணவிக்காக இரயில் சேவயை நிறுத்தாத அரசு எங்கே — 600 பள்ளிகளை மூடும் அரசு எங்கே

மிகுந்த வலியுடன் நான்

10 மாணவர்கள் படித்தாலும் பள்ளியை மூடினால் அந்த குழந்தைகளின் படிப்பும் எதிர்காலமும் பாதிக்காதா?

10 பிள்ளைகளுக்கும் படிப்பு கொடுக்க வேண்டியது நம் கடமையல்லவா? லாப நஷ்ட கணக்கு அரசு பள்ளிக்கூடம் நடத்துவதில் பார்க்கலாமா?

ஒரே ஒரு மாணவிக்காக ரயில் சேவையை தொடர்ந்து நடத்திய ஜப்பான் நாடு அளவுக்கு இல்லாவிட்டாலும், மூடப்பட முடிவெடுத்திருக்கும் அரசு பள்ளிகளின் எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளை தொடர்ந்து நடத்த வேண்டியது அரசின் தலையாய கடமை அல்லவா..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.