ஒரு பெண்ணின் முகநூல் பதிவு, கற்பழிக்கும் காமுகனே நீ அறிவாயா அந்த வலியை..?

0 617

போராடிச் சாக வேண்டுமா

“ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருக்கிறாள் என்பதை கூட உணராமல் தங்கள் காமவெறிக்கு அவளை கொன்று போட்டிருக்கிறார்கள். தர்மபுரி சிட்லங்கி என்னும் ஊரைச் சேர்ந்த 17 வயது பெண் செளமியா வேலைக்குப் போன இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் மிகக் கொடூரமாக அவளை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே மாதவிடாயின் வலியும் உதிரப்போக்கும் இருக்கும் நிலையில் ரணத்தின் மீதே இவர்கள் தங்கள் காமத்தை இறக்கி வைத்து அப்பெண்ணை துன்புறுத்தித் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

தட்டுத் தடுமாறி வீட்டுக்கு வந்ததும் உண்மை அறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ‘கற்பழிப்பு’ என்றில்லாமல் வெறும் ‘முயற்சி’ என்கிற ரீதியில் செக்‌ஷன் மாற்றி பதிவு செய்கிறார்கள்.

எப்.ஐ.ஆர் பதிவு நேரத்திலேயே மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை. கீழே விழுந்து மயங்கிவிட்டாள் என்பது போல் இரண்டு நாட்கள் கழித்துதான் போலீஸூம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஏழை அப்பாவி மலைவாழ் மக்கள் தானே…

பஞ்சாயத்து செய்து அனுப்பி வைப்போம் என்கிற மனப்போக்கு தான் அந்தப் பெண்ணை இன்று துடிக்கத் துடிக்கச் சாகடித்திருக்கிறது. இப்போது அந்த ஊரில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்களுக்கு வீதிக்கு வருவதைத் தவிர வேறென்ன தெரிந்துவிடப் போகிறது?”

விமலா என்ற முகநூலில் பதிவு

You might also like

Leave A Reply

Your email address will not be published.