ஒரு நாள் வரும் பணம் இருக்குனு தப்பு பன்னிட்டு ஔியுற நாய்ங்கள அடிச்சு துரத்த

0 290

இத எழுதவும் ஒரு கதை படிச்ச தாக்கம் தான்…
மண்குதிரை..
இங்க எல்லா பெண்களுக்கும் தொடுதல் பத்தி தெரியுறது இல்ல..பாலியல் கல்வி பத்தி தெரியுறது இல்லை

நாகரீக வளர்ச்சி பெற்ற சிலபேர்க்கு ,அதாவது வளர்ச்சி பெற்ற மக்களுக்கு தெரியுது…
ஒடுக்கப்பட்ற பெண்ணுக்கும் ,குழந்தைக்கும் தெரியுதா இல்லையே ?

முதல்ல என்னோட சொந்த கண்ணோட்டத்த விளக்கனும்னு நினைக்குறேன்….சின்ன விஷியம்
பத்து வயசு இருக்கும்
எங்க தாத்தா மூக்கு பொடி வாங்க கடைக்கு போக சொல்ல அவரு சொன்ன கம்பெனி ஒரே ஒரு கடைல தான் கிடைக்கும்னு சொல்லிதான் அனுப்புனாரு

நானும் போனேன்…கடைல யாரும் இல்ல வயசான அறுவது வயசு தாத்தா…உக்காந்துட்டு என்ன வேணும்னு கேட்டாரு சொன்னேன்…

வா கடைக்குள்ள கூப்டு எனக்கு மிட்டாய் ஓசியா கொடுத்துட்டு கண்ணத்துல முத்தம் கொடுத்தாரு அவரு செஞ்சத சரி தப்பெல்லாம் விவாதிக்க வரலை…

ஆனா அது தப்புனு இப்ப இருபது வயசுல தெரியுது..
ஏன் அப்ப தெரியல?

வீட்ல இத சொல்லனும்னு சொல்லி கொடுக்காதது யாரு தப்புனு விவாதிக்கவும் வரலை…?

ஆனா இன்னிக்கு தொடுதல பத்தி பெண்களுக்கு மட்டுமே சொல்லி கொடுக்கனும்னு சொல்ற சில அறிவாளிங்களே…

யாரு யாரு வீட்ல பையன் இருக்கோ சொல்லி கொடு பெண் உடலுறுப்ப பத்தி ..! இத சொன்னா பைத்தியங்குறாங்க…

ஏன் காலங்காலமா பொண்ணுங்க மட்டுமே ஒன்னு பாலியல் கல்வி கத்துக்கனும்… தற்காப்பு கலை கத்துக்கனும் .. எனக்கு பிடிச்சா தான நான் தற்காப்பு கலை கத்துக்க முடியும்..?

எவனோ ஒருத்தனுக்கு பயந்து வெறுப்பா கத்துக்கனுமா…
எல்லா பெண்களும தற்காப்பு
கத்துக்குட்டே ஆகனும்னு இல்ல..

கத்தி,மிளகாய்பொடி பொண்ணுங்க வைச்சுகுட்டு சுத்துறதெல்லாம் பாலியல் கல்வி ஐம்பது வருஷமா கத்துக்குற நம்ம நாட்டுக்கு எவ்வளவு கேவலம்

பாலியல் கல்வினு பாலின குறையோட சொல்லி தரோம் தப்பு தானா…

மண்குதிரை …! கதை
ஒரு பொண்ணு ஏன் இங்க வலிக்குதுனு மார்பகத்த காட்டி கேக்கும்போது பல்லு வளரும் போது வலிக்குற மாதிரி தான்டா அப்படினு ஒரு ஆசிரியர் அம்மா சொல்றாங்க…

அவங்க பள்ளில படிக்குற பொண்ணோட தங்கைக்கு ஒரு ஆண் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுக்குறாரு அத எப்படி ஆசிரியர் கிட்ட சொல்லி நீளமா போது கதை …
புகார் கொடுக்குறாங்க…
கடைசி இந்த பொண்ணு வீட்ல ஆம்பளை இ்ல்லனு பணம் கொடுத்து மிரட்டி புகார ஒன்னும் இல்லாம ஆக்கிறாங்க…

கடைசி வரி கதையில் மண்குதிரை எப்போது போர் குதிரையாக போகிறது?

எப்போ தான் இந்த பாலியல் கல்விய கூட இரண்டு பாலினத்தவருக்கும் சமமா சொல்லிதரபோறோம்?

இத சொன்னா.. எல்லாத்துலயும் பெண் ஆதிக்கம் காட்டுறாங்கனு கத்துறாங்க….

தொடுதல் கல்வி எனக்கானது மட்டும் இல்ல…! ஏன்னா நான் ஒன்னும் எந்த ஆண்களையும் வன்கொடுமை படுத்தல பா…

எல்லாத்தையும் சரியா கொடுங்கடா…

“பாலியல் கல்வி என்பது இரு பாலினத்தவருக்கும் ”

ஒரு நாள் வரும் பணம் இருக்குனு தப்பு பன்னிட்டு ஔியுற நாய்ங்கள அடிச்சு துரத்த

#பாலியல் கல்வி
#தொடுதல்
#பெண்களுக்கானது மட்டும் அல்ல

பதிவு :மனிதி தெரசா

You might also like

Leave A Reply

Your email address will not be published.