ஒரு ஆங்கில பதிவின் தமிழாக்கம் இது கடைசிவரை முடிந்தால் படியுங்கள்..!

0 110

ஆங்கிலக் கோரா சரித்திரத்தில் மிக அதிகமான ஆதரவு ஓட்டுகளை வாங்கிய பதிலை உங்களுக்கு தமிழாக்கம் செய்கிறேன்.

கேள்வி: இந்தியாவில் இணையதள வசதி மிகக்குறைவான விலையிலே கிடைக்கிறதே, அதனால் கோராவில் இன்னும் ஏழைகள் இருக்கிறார்களா?

இக்கேள்விக்கான பதிலை ராஜன்ன சிவம் என்ற இளைஞர் எழுதியிருக்கிறார். இதற்கான பார்வை 26 லட்சம். ஆதரவு வாக்கு இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து எட்டு நூறு.

என் பதிலை படிக்க உங்களுக்கு 20 விநாடிகள் ஆகும்.

மேலே உள்ள படத்தில் நான்கு கால்களுடன் ஒன்று இருக்கிறது அல்லவா அதுதான் நான் படுத்துக்கொள்ளும் கட்டில்.

என் படுக்கை உடன் நானும் பக்கத்து வீட்டு குழந்தைகளும் உள்ளோம். நானும் என் தந்தையும் இதில் படுத்து கொள்வோம். என் தாயாரின் பழைய புடவைகள் தான் எங்களுக்கு போர்வை. நாங்கள் இருக்கும் வாடகை வீட்டின் வாடகை ரூபாய் 400. ஏறக்குறைய ஏழு டாலர்.

கீழே இருப்பதுதான் நான் பொழுதைப் போக்கும் இடம். இங்குதான் நான் எங்களின் பசுக்களுக்கு உணவளிப்பேன். இதை நான் செய்யவில்லை எனில் என் தந்தை என்னை கோபிப்பார்

முதலில் நான் உபயோகம் செய்து பின்னர் என் தங்கைக்கு நான் கொடுத்த அலைபேசி.

கீழே இருப்பது என் தாயும் தந்தையும் வேலை செய்யும் விவசாய நிலம். அவர்கள் இருவரும் தினக்கூலியாக வேலை செய்வார்கள் தந்தைக்கு கூலி 350 ரூபாய்.தாயாரின் கூலி 200 ரூபாய். வேலை தினமும் கிடைக்காது.

கீழே உள்ள இடங்களிலிருந்து நான் புற்களை வெட்டி எங்கள் மாட்டு தொழுவத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்

நான் இந்த புகைப்படங்களை என் நெருங்கிய நண்பன் கொடுத்த VIVOY51L என்ற போனிலிருந்து பிடித்தேன். நான் தினமும் இரண்டு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்துக்கொண்டு இன்டர்நெட் சென்டர் சென்று என் ஈமெயிலையும் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களையும் பார்ப்பேன். நான் படும் கஷ்டத்தை பார்த்து என் நண்பன் இந்த அலைபேசியை கொடுத்தான்.

சமீபத்தில் எனக்கு வேலை கிடைத்தது. சம்பாதிக்க தொடங்கி விட்டேன்

நான் என் அறிவின் மேல் நம்பிக்கை வைத்துள்ளேன் அந்த அறிவை கொடுத்தது கோரா. இந்த அறிவு என்னை ஏழ்மையில் இருந்து பணக்காரனாக்கும்.

இப்பொழுது நான் கோரா உபயோகிக்கும் ஒரு ஏழை. எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நான் எப்படி ஏழ்மையில் இருந்து விடுபட்டு பணக்காரன் ஆனேன், ஏழ்மையில் இருந்து விடுபட்டு பணக்காரனாவது எப்படி என்று எழுதுவேன். படித்தமைக்கு நன்றி.

இந்த இளைஞனின் தன்மானமும் தன்னம்பிக்கையும் கண்டு நான் பிரமித்து நின்றேன். வாருங்கள் நாம் அனைவரும் இந்த இளைஞன் முன்னேற வாழ்த்துவோம்.

இந்தக் கேள்வியில் இருந்த திமிரும், அகங்காரமும், இந்த இளைஞரின் பதிலில் இருந்த தன்மையும், அமைதியும் தன்னம்பிக்கையும்,, 26 லட்சம் பார்வையாளர்களையும் இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 800 ஆதரவு வாக்குகளையும் கொடுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?

பதிவு: பாலசுப்பிரமணியம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.