ஏர்செல் பற்றி நீங்கள் அறியாத முகங்கள்..? ஸ்டெர்லைட் ரகசியம்..?

1 240

கிட்டதட்ட 20 ஆண்டுகாலம் கைபேசி உலகில் கோலோச்சிய ஏர்செல் நிறுவணம் மூட்டையினை கட்டுகின்றது என்கின்றார்கள்

வியாபார உலகில் அக்கார செட்டியார்களுக்கு பின் பல தமிழர்கள் முத்திரையிட்டனர், அதில் ஒருவர் சின்னகண்ணு சிவசங்கரன், சென்னையில்தான் பிறந்தார் , 1980களில் கம்பியூட்டர் வாங்கி விற்கும் தொழிலில் இறங்கினார் , அமிர்தராஜ் குரூப்பிடம் இருந்து அவர் வாங்கிய‌ ஸ்டெர்லிங் கம்பெனி சக்கை போடு போட்டது

சிங்கப்பூர் அவரின் தலமையகம் ஆனது, இப்பொழுது செஷல்ஸ் குடியுரிமை கொண்டிருக்கின்றார்.

தூத்துகுடி ஸ்டெர்லிங் ஆலை, மெர்கண்டைல் பேங்கினை வளைத்து போட்டது என விஸ்வரூபெமெடுத்த அவரின் கம்பெனிதான் ஏர்செல்

நல்ல வியாபாரி வருங்காலத்தை கணிக்காமல் தன் சாம்ராஜ்யத்தை தக்க வைக்க முடியாது, அப்படியே இந்த தொழிலை கையில் எடுத்தார் சிவசங்கரன், ஏர்செல்லை தொடங்கிய வேகத்தில் சென்னை ஆர்பிஜி செல் கம்பெனி எல்லாம் வாங்கி குவித்தார்

இந்தியாவில் மொபைல் புரட்சி சக்கை போடு போடும் என அவர் கணித்தது தவறல்ல, மாறாக பல எதிரிகள் உருவாவார்கள் என கணிக்காமல் விட்டது தவறுஇந்திய கைபேசி சந்தை கச்சா எண்ணெய் போல வருமானம் கொட்டும் விஷயம் என உணர்ந்த முதலாளிகள் உலகம் களத்திற்கு வந்தது

இத்தனை கோடி மக்கள் இருக்கின்றார்கள், எல்லோரும் கையில் போனோடு அலைகின்றார்கள் தினமும் அவர்கள் பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் ரகசியமாக உருவினால் கூட தினசரி எத்தனை ஆயிரம் கோடி புரளும் பணம், மாதகணக்கு கேட்கவே வேண்டாம், விடுவார்களா?டாடா வந்தார், இன்னும் சிலர் வந்தனர் , மலேசிய தொழிலதிபரான அனந்த கிருஷ்ணன் குறிவைத்தார், இதனை எல்லாம் கவனித்துகொண்டிருந்தார் அம்பானி

அம்பானியின் பிசினெஸ் ஸ்டைல் கிட்டதட்ட ஜப்பானை போன்றது, இன்று சீனாவின் ஸ்டைலும் அதுதான். அண்ணாச்சி வைகுண்டராஜன் ஸ்டைலும் அதுதான், ஏர் ஏசியா விமான ஸ்டைனும் அதுதான்

அது என்ன ஸ்டைல் என்றால், சந்தையில் வியாபாரிகளுடன் போட்டியா? கவலைபடாதே சல்லி விலையில் பொருளை கொடு, தரம் அப்படி இப்படி இருக்கட்டும் பிரச்சினை அது அல்ல, விலை குறைத்து அடிக்க வேண்டும். குறைப்பு என்றால் தரைவரை குறையவும் தயாராய் இருக்க வேண்டும்நஷ்டம் வரும், முதலில் தாங்கு. ஆனால் அடிக்கிற அடியில் எதிர் கோஷ்டி எல்லாம் ஓடும். அதன் பின் நீ தனிகாட்டு ராஜா. எதிரி யாரும் இல்லா நிலையில் முன்பு இழந்ததையும் சேர்த்து அள்ளிவிடலாம்”

இது ஒரு தந்திரம், நுட்பமும் அதிகம் ஆபத்தும் அதிகம்திருபாய் அம்பானி தன் டெக்ஸ்டைல் பணத்துடன் இதில் இறங்கினார், கொஞ்ச நாளைக்குள் இறந்தும் போனார், வாரிசுகள் தொடர்ந்தன‌

இந்நிலையில் மலேசிய அனந்த கிருஷ்ணனுக்கு உட்புகும் ஆசை வந்தது. அவர் மிகபெரும் வியாபாரா சாம்ராஜ்ய அதிபர், மலேசியாவின் மிகபெரும் புள்ளி, பெட்ரோல், கட்டுமானம், விமானம் என ஏகபட்ட தொழில்கள் அதிலொன்று ஆஸ்ட்ரோ டிவி

மலேசிய டிவி ஒளிபரப்பு முழுக்க அவர் கட்டுப்பாடு, எதிரியே கிடையாது. மலேசியாவில் தமிழ் திரைபடங்கள் சில நாட்கள் ஓடும் அதன் பின் காணாமல் போகும்எங்கு போகும்? இத்தனை டாலர் கட்டிவிட்டு அனந்த கிருஷ்ணனின் ஆஸ்ட்ரோவில் பார் என விளம்பரம் வரும், அந்த அளவு அவருக்கு வியாபார தந்திரம்

தயாநிதிமாறனுக்கு சன்டிவி வியாபாரம், அனந்த கிருஷ்ணனுக்கு இந்திய மொபைல் போன் சந்தை மீது கவனம் இருவரும் இணைந்தால் என்னாகும்?சிவசங்கரனுக்கு நெருக்கடிகள் வந்தன, இம்மாதிரி கம்பெனிகளுக்கு உரிமம் வழங்கும் தகவல் தொடர்பு துறை அமைச்சராக தயாநிதிமாறன் அப்பொழுது இருந்தார், என் தொழிலை தொலைக்கபார்க்கின்றார் மாறன் என குமுறிகொண்டிருந்தார் சிவசங்கரன்இறுதியில் ஏர்செல் நிறுவணம் அனந்த கிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவணத்திற்கு கைமாறியது

இதுபற்றி வழக்கெல்லாம் நடந்தது, அந்நிய நாட்டவரான குவாத்ரோச்சியினையே மலேசியாவில் தொட்டுபார்க்க முடியாத இந்திய அரசு அனந்த கிருஷ்ணனை என்ன செய்யமுடியும்?வழக்கு என்னமோ ஆனதுஇப்பொழுது வழக்கு சிக்கல் அல்ல, ஏர்செல்தான் சிக்கல்

தொழிற் போட்டியில் எப்படி பாம்பே டையிங் முதல் எத்தனையோ பரகாசுர கம்பெனிகளை அம்பானி குழுமம் அதிரடியாய் விரட்டியதோ அப்படி மொபைல் உலகிலும் அதிரடி காட்டிற்றுஅது ஜியோ என இறங்கும்பொழுதே சொன்னோம், இந்த விலைகுறைப்பால் எதிர்கம்பெனி ஒன்று விலை குறைக்க வேண்டும் அல்லது மூட்டை கட்டவெண்டும் இரண்டுமல்லாது சாத்தியமே இல்லை

அதுதான் நடந்திருகின்றது, மூட்டை கட்டுகின்றது ஏர்செல். இன்னும் பலர் கட்டலாம்மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் கூட மிக தாழ்வாக இறங்கி வந்தாயிற்று, இனி அது ரப்பர் ஸ்டாம்ப் கம்பெனி ஆனாலும் ஆகலாம்

இன்று ஜியோ குறைவு அது குறைவு என மகிழும் இந்திய சமூகம், எல்லா கம்பெனியும் மூட்டை கட்டியபின்பே அம்பானியின் முகத்தை காணும், அதுவரை என்சாய்இதில் யார் மகிழ்வார்களோ தெரியாது, கதற கதற தன் நிறுவணத்தை விற்ற சிவசங்கரனுக்கு நிச்சயம் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும்

இனி அந்த வழக்கில் நீதி கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் அவருக்கு என்ன?

இந்த செய்தி எல்லாம் இந்த ஏர்செல் கவிழும் நேரத்தில் எந்த ஊடகமாவது வெளியிடுமா என்றால் இல்லை, அதனால் என்ன நாம் சொல்லிவிட்டோம்..

You might also like
1 Comment
  1. TEST says

    IS IT TRUE SIVASANGARAN IS BINAMI OF BIG MARAN?

Leave A Reply

Your email address will not be published.