ஏன் முளைகட்டியுடன் பயறு வகைகளை சாப்பிட சொல்கிறார்கள்..? இதன் பின்னும் சில அறிவியல்

0 841

முளை கட்டிய பச்சை பயிர் (Sprouted Green Gram):

நாம் தினமும் சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. ஒரு பருப்பை அப்படியே உண்பதற்கும் அதை முளை கட்டி உண்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு பருப்பை முளை கட்டும் போது அதன் சத்துக்கள் இரு மடங்காகும்..

முளை கட்டிய பச்சை பயிரில் உள்ள சத்துக்கள் (Nutrients):
முளை கட்டிய பயிரில், அசைவத்துக்கு இணையான புரதச் சத்து நிறைந்துள்ளது ..
முளை கட்டிய பயறில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, கே, தாதுக்கள், நல்ல கொழுப்பு சத்தும் மற்றும் முக்கியமான அமினோ அமிலங்களை உற்பத்தி செய்து தருகின்றன.

முளை கட்டிய பயிரால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் (Benefits) :

எலும்புகள் நல்ல வளர்ச்சியடையும்
எடையைக் குறைக்க உதவும்.செரிமாணத்தை சீராக்கவும்.
உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றும்
குழந்தைகள் நல்ல வளர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுத்து சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். அறிவு வளர்ச்சி அதிகரிக்கும்.
உடல் பயிற்சி செய்யும் போது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களை அளிக்கும் .
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உணவில் சேர்த்து கொள்ள சில வழிகள் (Recipes):

முளை கட்டின பச்சைப் பயறு காய்கறி கலவை (salad), சுண்டல், பச்சைப் பயறு குழம்பு,கூட்டு போன்ற உணவு வகைகளாக செய்து உண்ணலாம்..

உணவின் பயன் அறிந்து உணவோம் ..

You might also like

Leave A Reply

Your email address will not be published.