ஏன் குரங்குகள் கோயிலில் குடியேறுகின்றன…?.உங்களுக்கும் இது உறுதியாக நடக்கும்..!

0 820

அடிபட்டு இரத்த வெள்ளத்தில் தன் குட்டியை அணைத்தபடி இடிந்துபோய் சாலையோரம் அழுதுகொண்டே அமர்ந்திருக்கும் குரங்கின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்ககூடும்.

சாலையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சக்கரங்களுக்கு தெரியப்போவதில்லை தங்களால் அடித்து வீசப்பட்ட விலங்கின் கதை.

காட்டின் ராஜா வேண்டுமானால் சிங்கமாக இருக்கலாம்.ஆனால் காட்டில் எங்குவேண்டுமானாலும் சென்று சேட்டை செய்யும் உரிமையை வைத்திருக்கும் குறும்புக்கார குழந்தைகள் நாங்கள்தான்.

யாரையும் கோவப்பட வைப்போம் சற்று நேரத்தில் அவர்களையே சிரிக்கவும் வைப்போம்.எங்கள் கால்படாத தடங்கள் கூட இருக்கலாம் ஆனால் எங்கள் தடங்கள் படாத மரங்களே இல்லை காட்டினிலே.

மரங்கள் தான் காட்டின் பயிற்கள் என்றால் பறவைகளே அங்கு விவசாயிகள்.என்னதான் குறும்புக்காரர்களாக இருந்தாலும் பறவைகளால் சுமந்து செல்லப்பட்டு பியிறிடப்படமுடியாத பழங்களின் விதைகளை பத்திரமாக நட்டு அதை அடுத்த தலைமுறைக்கு கடத்திச்செல்லும் கடமையை எப்போதும் நாங்கள் மறந்ததில்லை.

காட்டில் ஏதேனும் அசம்பாவிதமா அபாயமா நாங்கள் ரெட் அலார்ட்டாக மாரி ஓடி ஓடி எச்சரிக்கை செய்வோம்.
ரகல செஞ்சு அடிச்சிக்கிறதுலையும் தாயாபிள்ளையா கட்டிப்புடிக்சுக்கிறதுலையும் எங்களை போல யாரும் இல்ல.

காலச்சக்கரம் சுழன்று ஓடியது..
மனிதர்களுடைய வேட்டை குணம் அதிகமானது..
மரங்களின் எண்ணிக்கை குறைவானது..
நாங்கள்தான் காட்டின் குழந்தைகளாச்சே.
மரங்கள்தான் எங்கள் தாய்மடியாட்சே.
எங்கள் தாயை கூறுபோட்டு கொன்றீர்கள்.
அனாதையானோம்.

எங்கள் நிலத்தை ஆக்ரமித்தீர்கள்.
வீடு இழந்தோம்.தாய்மண் பிரிந்தோம்.
சோறில்லாமல் பிச்சைக்காரற்கள் ஆனோம்.பிச்சை எடுக்க நகரங்கள் கோயில்கள் நோக்கிவந்தோம்.கிளைகளை வளைத்து பிடித்து தாவ சொல்லித்தரவேண்டிய எங்கள் குட்டிகளுக்கு கைகளை விரித்து விரல்களை நீட்டி பிச்சை எடுக்க சொல்லித்தருகிறோம்.

அன்று நாங்கள் திண்று போட்ட பழங்களை உண்டு பல சிற்றுயிர்கள் உயிர் வாழ்ந்தது காட்டினில்.இன்று யாராவதும் திண்றுவிட்டு போட்டால்தான் எங்களுக்கு உணவு என்று ஏங்கி நிற்கிறோம்

விடுமுறை நாட்கள் என்றால் எஞ்சியிருக்கும் காடுகளை நெகிழிப்பைகளால் அழிக்க குடும்பத்தோடு சந்தோசமாய் படையெடுத்துவரும் உங்களை எதிர்பார்த்து காத்திருந்தோம் நீங்கள் தரும் உணவிற்காக.

உங்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது வேடிக்கை காட்ட ஒன்றிரண்டு பழங்களை வீசுவீர்களே அப்படி வீசப்படும் பழங்களை அடைந்துகொள்வதே வாழ்நாள் சாதனையாக இருக்கிறது.அந்த சாகசங்களை செய்யும்போதும் உங்கள் வாகனத்தில் வந்து விழுந்து உங்கள் பிக்னிக் மூடை கெடுத்துவிடுகிறோம்.

என்னசெய்வது இன்னும் எங்கள் கால்களுக்கு பிரேக்கும் காதுகளுக்கு சைடு மிரரும் முலைக்கவில்லையே.உங்கள் வழியில் நாங்கள் வரவில்லை எங்கள் வழியில் நீங்கள் தான் வருகிறீர்கள் என்ற செய்தியை எப்படி உங்களுக்கு சொல்வது?…..வன உயிரினங்களின் வாழிடம், வழித் தடங்களை அழித்தல், கட்டிடங்கள், வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, அறிமுகப்படுத்தப்படும் சிற்றினங்கள், மக்கள்தொகை அதிகரிப்பு, இயற்கைக்கு மீறிய அதிகமான அறுவடைக்காக பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் உள்ளிட்டவை பல்லுயிர்பெருக்கத்தை அழிக்குமென்பதை 6 அறிவுகொண்ட மனித இனத்திற்க்கு எப்படி தெரியாமல் போனது??

நாங்கள் உணவு பிச்சை எடுக்க உங்களை தேடி வருகிறோம்.இயற்கை வளங்களை அழித்துவிட்டு நீங்கள் யாரிடம் சென்று பிச்சை எடுப்பீர்கள்??.

மண்ணை மண்ணின் வளங்களை அழித்துவிட்டால் மண்ணில் வாழுகிற உயிரிகள் ஒவ்வொன்றாய் அழியும்.என்ன மனிதர்களின் பெயர் அந்த பட்டியலில் சற்று கடைசியாக இருக்கும்.

எனது நிலை என்பது என்னோடு நிற்கப்போவது இல்லை.உங்களுக்கும் இது உறுதியாக நடக்கும்.அதை தடுத்துநிருத்துகிற ஒரே வாய்ப்பு மனித இனத்திற்கே உள்ளது.
குரங்கு கையில் பூமாலை என்பீர்களே.

நாங்கள் சொல்கிறோம்.மனிதர்கள் கையில் வாக்கு.
மண்ணுக்கு அரசியல் செய்யாமல் மண்ணில் வாழுகிற ஒரு உயிரியான மனிதனுக்கு அரசியல் செய்ய முடியாது.
மண்ணை வாழ வைக்க திட்டம் வைத்திருப்பவனை ஆள வைக்காமல்
மண்ணில் எந்த உயிரியையும் வாழ வைக்க முடியாது.

ஆக்கம் : வருண் சுப்ரமணியம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.