எவையெல்லாம் சீன பட்டாசுகள்..? சீன பட்டாசை ஏன் புறக்கணிக்க வேண்டும்..?

0 479

சீன பட்டாசு மீண்டும் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளதால் சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முதல் அங்கு வேலை பார்க்கும் தொழிற்சாலைகள் வரை கலக்கம் அடைந்துள்ளனர் இதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சீன பட்டாசுகள், விளையாட்டு பொம்மைகள் பெயரில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரேட் பயன்படுத்தப்பட்டதால் அபாயமானது என கூறி இந்திய அரசு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்தது.

இதனால் சீன பட்டாசு வரத்து குறைய துவங்கியது. தற்போது மீண்டும் சீன பட்டாசுகள், சட்டவிரோதமாக குழந்தைகள் விளையாட்டு பொருள் என கூறி இந்தியா முழுவதிலும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை போன்ற இடங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது. பாப் பாப், கோல்டு பைரோ, கான்பெட்டி என்ற பெரியல் சிறிய அட்டை பெட்டியில் பெட்டிகடைகள், பேன்சி ஸ்டோர்கள் என அனைத்து இடங்களிலும் இந்த பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பாப்பாப் பட்டாசு கீழே போட்டாலோ, ஏறி மிதித்தாலோ, கையால் அழுத்தம் கொடுத்தாலோ உடனடியாக வெடிக்கக் கூடியது.

இந்த வகை பட்டாசுகளில் பொட்டாசியம் குளோரேட், சில்வர் பல்மினேட் போன்ற தடை செய்யப்பட்ட கெமிக்கல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதானல் சிவகாசி பட்டாசுகள் விற்பனை பாதிக்கும் அபாயம் உள்ளது. சீன பட்டாசு விற்பனையை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சீன பட்டாசு இந்த ஆண்டும் அதிக அளவில் கள்ளத்தனமாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. முடிந்த வரை மக்கள் சீன பட்டாசை புறக்கணித்தாலே சீன பட்டாசை வாங்க வியாபாரிகள் அஞ்சுவார்கள்

இது மிகவும் ஆபத்தான பட்டாசு. இந்த பட்டாசு பெட்டியில், எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது, உற்பத்தி செய்த நிறுவனத்தின் பெயர் போன்ற எந்த தகவலும் இடம்பெறாது.

பட்டாசு பாக்ஸில் இது பட்டாசு இல்லை, மாசு ஏற்படாது என எழுத பட்டிருக்கும். ஆனால் இதில் தடை செய்யப்பட்ட கெமிக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் பெரிய அளவிலான விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. சீன பட்டாசு இந்தியா முழுவதிலும் விற்பனை செய்யப்படுவதால் சிவகாசி பட்டாசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சீன பட்டாசுகளை இந்தியா புறக்கணிக்க மறுத்தாலும் மறந்தாலும் நான் பயன்படுத்தினால் சிவகாசி பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்துவேன் என்பவர்கள் இதனை பகிர்ந்து பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்

சிவகாசியின் வாழ்வாதாரம் தீபாவளியை நம்பிதான்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.