எப்போ பாரு, நாய், பூனை, ஆடு மாடு, கோழி, இதை பத்தியெல்லாம் எழுதிட்டு இருக்க என்ற கேள்விகள் ஏராளம்..!

0 1,253

மாமிசம் உண்ணா மனிதன் இல்லை என்றே கூறலாம் ஆனால் சிலர் பால் குடிப்பது , தயிர் சாப்பிடுவது மாமிசம் இல்லை என்றே உணர்கிறார்கள். மாடு வளர்ப்பவன் என்ற முறையில் இவை அனைத்தும் மாமிசம் என்றே உணர்கிறேன் நான்..! இதை பற்றிய விவாதிற்கு இங்கு வரவில்லை..!

எந்த உயிரியையும் கொன்றால் அதனை தின்றால் பாவாம் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு..! கொன்றால் பாவம் தின்றால் போச்சி

கோழியை கொன்று உண்பவன் மாட்டை கொன்று தின்பவனை எந்த விதத்திலும் கேவலமாக பார்க்க தகுதியில்லை..! ஆனால் இங்கு இடையில் சாதி மதம் மாமிசத்திலும் பல வேறுபாடுகளை கொண்டு வந்து விடுகிறது..!

எலியை கொல்ல பூனை வளர்க்கிறோம் எலிமேல் இறக்கம் காட்ட நினைத்தால் பூனைகள் என்றே அழித்திருக்கும்..,

வயல்களில் மயில்களை விரட்ட நாய்களை வளர்த்தோம் இங்கு இரக்கத்திற்கு வேலையே இல்லை காரணம் இதான் இங்க வாழ்க்கை சுழற்சி…!

இதெல்லாம் எங்களுக்கு தெரியும் இப்போ என்னதான்யா சொல்லவார அப்புடின்னு பலபேர் மனசுல நினச்சிருப்பிங்க..!

இதெல்லாம் சொல்லாம நான் சொல்ல வந்தத சொன்னா இங்க பலபேருக்கு புரியாது அதான் மேல உள்ள விளக்கம்..!

பூச்சிக்கொல்லி, விசம்

ஆனா கால போக்கில் எலிய கொல்ல எலி விசம் விற்பனைக்கு வந்தது பூனைக்கு மதிப்பில்லாம மட்டும் போகல…! எலியோட சேர்ந்து மறைமுகமாக பூனையும் சாக ஆரம்பித்தது, எலிக்கு விசம் வச்சா எப்புடிடா பூனை சாகும் அப்புடின்னு நினைப்பிங்க…!

அந்த விசத்த சாப்பிட்ட எலி எங்காவது செத்து கிடக்கும். இறைதேடும் பூனைகளின் கண்ணில் பட்டால் சில பூனைகள் அந்த எலியை உண்ணும் போது அந்த விசம் பூனையையும் பாதிக்கும் இப்போ அந்த பூனை சாப்பிட்ட எலியில் விசத்தன்மை அதிகமா இருந்தால் பூனையும் இறக்க நேரிடுகிறது…!

இறந்த பூனையில நாய் வாய் வைக்க பூனையில் இருந்த நச்சு நாய்க்கு வரும் குறைந்த விசத்தனையுடனே…! இதனால் நாய்கள் பெரிதும் பாதிக்கவில்லை என்றாலும் பாதிப்புள்ளாகிறது..!

இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுறது இல்ல உங்களுக்கு எலித்தொல்ல அவோளோதான் உங்களுக்கு தெரிஞ்சது…!இதுவே தொடர்ந்து ஒரு 30 வருசத்துக்கு நடந்தா என்ன நடக்குமுன்னு யோசிச்சி பாருங்க…!

கொசு அதிகமா இருக்குத்துன்னு அதை அழிக்க விசத்த தேடி வாங்குற நாம தான் கொசு மட்டும் எதனால அதிகமானதுன்னு யோசிக்கிறதே இல்ல..! தட்டான், தவளை, வண்டுகளை எல்லாம் பூச்சிக்கொல்லி அடித்து கொன்றதன் விளைவே கொசு உற்பத்தி,

தட்டானையும் தவளை இனத்தையும் காக்காமல் கொசுவை ஒருநாளும் ஒழிக்க முடியாது என்பதே நிதர்சனம்..!

பக்கத்துல வயல்ல ஒரு மனுஷன் எலிக்கு விசம் வைக்க அதை ஒரு கீரி சாப்புட்டு சாக , இறந்த கீரிய நாய் சாப்பிட, நாய்க்கு இரண்டு கால் முடங்கி போக..! வேதனையில் எழுதுற எழுத்து தான் இது..!

முடிந்தவரை எந்த ஒரு இனத்தை அழிக்கவும் விசத்தை கையில் எடுக்காதீர்கள் அது அந்த இனத்தை மட்டுமல்ல அதனை சார்ந்த இனத்தையும் அழித்துவிடும்..!

நாளை நமக்கும் இதே நிலை என்பதை மறந்து விடாதீர்கள்..!

குறிப்பு: அந்த கீரிய நான் எடுத்து புதைத்து விட்டேன்..!

எந்த ஒரு உயிரியும் அதனை சார்ந்த உயிருக்கு உணவாகும் போது பிரச்சினை இல்லை..! விசமாகும் போதே பிரச்சனைகள்

நன்றி…

You might also like

Leave A Reply

Your email address will not be published.