எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ அப்போதெல்லாம் சட்டசபையில் ” அண்ணனுக்கு நாலு இட்லி,கெட்டி சட்னி” என்ற வகையில்

0 219

எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ அப்போதெல்லாம் மக்களின் மேல் அரசாங்கத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும் திடீர் பாசமும்,கருணையும் பொங்கும்…….

அந்த வகையில் வந்த மாநில அரசின் அறிவிப்புதான்..வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வங்கி கணக்கில் ரூபாய் இரண்டாயிரம் செலுத்தப்படும்.

ஒவ்வொரு ஊரிலும் ஏற்கனவே வறுமை கோட்டிற்கு கீழ் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு நடத்தி..ஒரு ஊரில் ஐந்தாயிரம் பேர் என்றால் ஒரு இரண்டாயிரம் பேர் ..அந்த லிஸ்டில் பெயர் இடம் பெற்றிருப்பார்கள்.

இப்போது இந்த அறிவிப்பால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள மொத்த மக்களும் எங்களையும் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள கணக்கில் சேர்த்துவிடுங்கள் என ஜெராக்ஸ் கடைகளில் விற்கும் மனுவோடு ஒவ்வொரு VAO அலுவலகத்திலும் கூட்டம் படை எடுக்க..பல ஊர்களில் கிராம நிர்வாக அதிகார்கள் அலுவலகத்திற்கே வராமல் மட்டம் போட..
அலுகத்தில் இல்லாத கிராம நிர்வாக அதிகாரிகள் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என மாவட்ட கலெக்டர் சீனுக்கு வரும் வரை ஒரே பரபரப்பு.

தப்பாக கணக்கு போட்டு ,மக்களை மகிழ்ச்சி படுத்தலாம் என்று காரியத்தில் இறங்கினால் ..இப்போது ஒவ்வொரு ஊரிலும் அரசாங்கத்தின் மேல் கோபமும் வெறுப்பும் கொண்டு மக்கள் போட வேண்டிய ஓட்டும் கிடைக்காமல் போச்சே என உள்ளூர் அரசியல் வாதிகள் கவலைப்பட்டு மேலிடத்திற்கு செய்தியை போட..
உடனே எல்லோரிடமும் மனு வாங்கி அவர்களையும்” கவனிக்கும்” வேலை ஆரம்பமாகி விட்டதாம்.

எத்தனையோ திட்டங்கள் அறிவிப்போடு நின்றுவிட்டது. கவனம் செலுத்த வேண்டிய உடனடி பணிகள் எத்தனையோ உள்ளது. சட்டசபையில் ” அண்ணனுக்கு நாலு இட்லி,கெட்டி சட்னி” என்ற வகையில் ஒவ்வொரு ஊரிலும் அறிவித்த பல திட்டங்கள் ..அதன் பிறகு பேச்சே இல்லை..
இந்த நிலையில்…ஓரளவு மக்கள் தரம் உயர வேண்டும் என தாமாகவே ஏதோ ஓர் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று முன்னேறினாலும்..அவர்களை இழுத்து வறுமை கோட்டிற்க்கு கீழே போ..
என சொல்லவது நியாயமா???.

அடுத்து மத்திய அரசு அறிவிப்பு..
சிறு குறு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூபாய் இரண்டாயிரம் வீதம் மூன்று முறை வருடத்திற்கு ஆறாயிரம் செலுத்தப்படும். விவசாயம் செய்யும் இடம் அவர்கள் பெயரில் இருக்க வேண்டும். பெரும்பாலான சிறு குறு விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்கள் அப்பா,தாத்தா பெயரிலேயே இருப்பதால் இந்த அறிவிப்பு அவர்களையும் அலைய வைத்திருக்கிறது.
உண்மையான விவசாயிகளுக்கு இந்த பலன் கிடைக்குமா என்ற கவலையும் ஏற்படுகின்றது.விவசாயம் செய்யாத பெரும் விவசாயிகளுக்கே இந்த பலன் சென்றடையும்.

கிராமங்களில் காலை முதல் மாலை வரை மக்கள் ..கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகம், வங்கி , ஊரில் உள்ள அத்தனை ஜெராக்ஸ் கடைகள்.இப்படியாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களை எப்போதும்..ஒரு பரபரப்பு கொதிநிலையில் வைத்திருப்பது அரசியல் வாதிகளின் வாடிக்கை.
மறுபடியும் தேர்தலில் நாம் ஓட்டு ஜ அவர்களுக்கு கேளிக்கை.
அடுத்த ஐந்து வருடம் அவர்களுக்கு வாணவேடிக்கை.

இதெல்லாம் சரியா? நியாயமா நீங்களே சொல்லிட்டு போங்க.

You might also like

Leave A Reply

Your email address will not be published.