என் பெற்றோர் சொன்ன அந்த வார்த்தைகள்தான்’ போலீஸிடம் இதை ஒப்படைக்க காரணம் மாணவன் நெகிழ்ச்சி….!!!

0 326

ஈரோட்டில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 50,000 ரூபாயை ஈரோடு எஸ்.பி.யிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின், நேற்று காலை 11 மணியளவில் இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் சிலருடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான். அப்போது பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் 50,000 ரூபாய் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது. இதைப் பார்த்த சிறுவன் யாசின், அந்தப் பணத்தை அவனுடைய வகுப்பாசிரியரிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறான். சிறுவனின் இந்த நேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.

‘எங்க அப்பா துணியை பைக்ல எடுத்துட்டுப் போய் அங்கங்க கடை போட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்கார். அம்மா அக்கம்பக்கத்துல பாத்திரம் தேக்கிற வேலை செய்றாங்க. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். அவன் 9-வது படிச்சிக்கிட்டு இருக்கான். ‘யார் பொருளுக்கும் ஆசைப்படக் கூடாது. எல்லாரும் நம்மளை மாதிரிதான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க’ன்னு எங்க அம்மாவும் அப்பாவும் அடிக்கடி வீட்ல சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நேத்து அப்படித்தான் ஸ்கூல் பக்கத்துல இருக்கிற ரோட்டுல காசு நிறைய கிடந்துச்சி. ரோட்டுல யாருமே இல்லை. உடனே அந்தக் காசை எடுத்துட்டுப் போய் டீச்சர்கிட்ட கொடுத்துட்டேன். அவங்க அதை போலீஸ்கிட்ட கொடுத்திடலாம்னு சொன்னாங்க.

எனக்கு ஒரே ஹேப்பி. ஏன்னா எனக்கு போலீஸ்னா ரொம்பப் புடிக்கும். படிச்சி போலீஸ் ஆகணுங்கிறதுதான் என்னோட ஆசை. டீச்சர் என்னை போலீஸ்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அங்க கொண்டு போய் கீழ கிடந்ததுன்னு சொல்லி காசை கொடுத்தோம். எனக்கு கை கொடுத்த போலீஸ் சார், ‘குட் பாய்’ன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. எங்க அம்மா அப்பாகிட்டயும் வந்து வீட்டுல சொன்னேன். அவங்களும் என்னை கட்டிப்பிடிச்சி சந்தோஷப்பட்டாங்க. என்னை எல்லாரும் குட் பாய்ன்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

தம்பி முகம்மது யாசின் நேர்மையை நாமும் பாராட்டலாமே

You might also like

Leave A Reply

Your email address will not be published.