என்றாவது யோசித்தது உண்டா ஒரு வருடத்தில் வளரும் நாட்டுகோழியை எப்படி ஊசி போட்டு 40 நாளில் வளர வைக்கிறார்கள் என்று..?

0 1,061

KFC மரபணு மாற்றம் கோழியைப் போன்றே 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான ரசாயணங்கள் ( Chemicals) கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.

இந்த கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வேகமாக வளர்வதற்காக கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது.

இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசி, செல்களை வேகமாக வளரவைத்து கோழியின் எடையை அதிகமாக்குகிறது. பண்ணை வைத்துள்ள ஒரு சிலர் குறுகிய லாப நோக்கத்தோடு ஈஸ்ட்ரோஜென் மருந்துகளை கோழிகளுக்கு அதிகளவில் கொடுத்து விடுகின்றனர்.

இதனால் பிராய்லர் கோழிக்கறி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாம் காலையில் எழுந்து, இரவு தூங்கும் வரை செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மனித உடலில் இன்சுலின், பிட்யூட்டரி, ஈஸ்ட்ரோஜென், புரஜ்சக்ஸ்ட்ரான் என 30க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் சுரக்கிறது.

இந்த ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கியமான வேலையை செய்துவருகிறது. இவை அனைத்தும் மனித உடலில் தேவையான அளவு இருந்தே ஆக வேண்டும். ஏதேனும் ஒரு ஹார்மோன் சுரக்காமல் குறைந்தாலோ அல்லது தேவையை விட அதிமானாலோ உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

இவற்றில் புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் ஆண்களுக்கும், ஈஸ்ட்ரோஜென் பெண்களுக்கும் 2 ம் நிலை பால் வேறுபாட்டை பிரிக்கிறது. அதாவது இருபாலருக்கும் உடல் உறுப்புகளில் மாற்றங்களையும், உணர்வுகளையும் ஏற்படுத்துகிறது.

புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் பெண்களுக்கு அதிகம் சுரந்தால் முகத்தில் முடி வளர்வது உள்ளிட்ட பிரச்னைகளும், ஈஸ்ட்ரோஜென் ஆண்களுக்கு அதிகம் சுரந்தால் கைனக்கோமாஸ்ட்ரோ எனப்படும் மார்பு வீக்க நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகிறது.

கறிக்கோழிகளில் போடப்படும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சமைத்த பின்னரும் நிலைமாற்றமில்லாமல் உடலுக்குள் செல்வதால், இருபாலருக்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை உதவிப்பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “உணவுப்பொருட்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் சமைத்த பின்னரும் உணவில் கலந்தே இருக்கும் என ஆய்வில் தெரிந்துள்ளது. ஈஸ்ட்ரோஜென் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்பெய்தல், கர்ப்பப்பை புற்று நோய், உடல் பருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது கைனக்கோ மாஸ்ட்ரோ எனப்படும் மார்பக வீக்கநோய் ஏற்படுகிறது.

ஆண்களுக்கு மார்பில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும். அதேபோல் ஆண்களிடம் பெண் தன்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே ஈஸ்ட்ரோஜென் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொள்வது நல்லது,” என்றார்.

அதனால், பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான் ஆகும்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது.

இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட கோழி, மற்றும் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது.

சிறு நீரகங்களிலும், கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகி விடுமாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. எனவே, இனி பிராய்லர் கோழிகளை உண்பதனை தவிர்ப்பீர்! உடல் நலம் காப்பீர்!.

You might also like

Leave A Reply

Your email address will not be published.